Thursday, April 28, 2011

சொல்வெட்டுக்கள் -2010


கடந்த வருடத்தில் நானெழுதிய டிவிட்டர் துணுக்குகளை சேகரித்து வைக்க வேண்டுமென தோன்றியதன் விளைவு இந்த பதிவு.....எதிர்கால சந்ததிகளுக்கு பயன்படட்டும். :))

வரலாறு ரொம்ப முக்கியமில்லையா...!!

 saravanakkumar 

ஆடிக் காற்றில் அம்மியும் பறக்குமாம், கொடியில் காயும் என் சட்டை கூட அசையவில்லை!


 saravanakkumar 

தமிழ் வலையுலகில் முதல் தடவையாக பக்கம் நிரப்புதல் என்றொரு வகையினை அறிமுகம் செய்திருக்கிறேன்....சாதனைகள் தொடரும் :)


 saravanakkumar 

”மங்கை மான்விழி அம்புகள் என் மார் துளைத்ததென்ன!”....இதை கவுத்தீட்டா...ன்னு ஒரே வார்த்தையில் சொல்லி விடலாம்....வாழ்க என் செம்மொழி :)


 saravanakkumar 

மழை பிடிக்கிறது, நனைவதும் சுகமாய்த்தான் இருக்கிறது.....ஆனால் கார் ஓட்டுவதுதான் எரிச்சலாய் இருக்கிறது.


 saravanakkumar 

பிரபல ட்விட்டராவது என முடிவு செய்து விட்டேன்...இனி நிறைய உளற் வேண்டும், உதாரணத்திற்கு எந்திரன் குப்பை, சப்பை என சொல்லிக் கொள்ள வேண்டும்.

 saravanakkumar 

Check out this site: WATERCOLOR....MY LOVE --


 saravanakkumar 

நாளைக்கு திருப்பதி போறேன்...பத்து வருசம் கழிச்சி பாலாஜி கூட ஒரு அப்பாயின்மெண்ட்.


 saravanakkumar 

ட்விட்டர் கணக்கை முகபுத்தகத்தில் அறிமுகம் செய்து விட முடிவு செய்திருக்கிறேன்.எனது துண்டிலக்கியங்கள் எல்லோருக்கும் போய்ச் சேரட்டும்.. :)


 saravanakkumar 

wang's kitchen போய் வெஜிடபிள் ஃப்ரைட் ரைஸ் சாப்பிட்டேன்,மழை கொட்டுகிறது. நான் இயற்கைக்கு மாறாய் ஏதும் செய்து விட்டேனோ?, குற்றவுணர்ச்சி!


 saravanakkumar 

நல்லதையும், கெட்டதையும் பற்றியே யோசித்துக் கொண்டிருப்பதால் சொந்த ஃபீலிங்க்கை அனுபவிக்கவே முடியாமலே போய்விடுகிறது..ம்ம்ம்ம் (புலம்பல்)


 saravanakkumar 

மிக சமீபத்தைய என்னை ட்விட் படமாக்கிவிட்டேன். இனி பெண்கள் என் ஃபாலோயர் ஆக யோசிப்பார்கள்.மனைவிக்கு தெரிந்தால் சந்தோஷிப்பாள்.(Be Positive!)


 saravanakkumar 

கனிமொழியை எனக்கு பிடிக்கவில்லை, நான் திரைப்படத்தை சொல்வதாக ......(நிரப்பிக் கொள்ளுங்கள்)


 saravanakkumar 

காயமடைவதாலோ, இடறி விழுவதாலோ சிங்கம் ஒரு போதும் சிறு நரியாகி விடாது, எப்போதும் சிங்கம்தான்....(தற்பெருமை...!)


 saravanakkumar 

கொட்டும் மழையில் காதலி அனைய பைக்கில் பறந்தவனைப் பார்த்து உண்டான வயிற்றெரிச்சல் மழை விட்டும் அனையவில்லை...


 saravanakkumar 

சென்னையில் இருந்து கொண்டு அமெரிக்க நேரத்தில் ட்விட் எழுதிக் கொண்டிருக்கிறேன். க்ளோபல் சிட்டிசன் :)


 saravanakkumar 

சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.: 


 saravanakkumar 

குருவருளால் தொடர்ந்து இருபதாவது வருஷமா மாலை போட்டு, ஒரு மாசம் விரதமிருந்து நாளைக்கு பழனிக்கு போறேன், வரலாறு முக்கியம்ல! :)


 saravanakkumar 

என் பெயர் வைக்கிற ஹோட்டல்காரர்களெல்லாம் பிழைத்துக் கொள்கின்றனர். :))


 saravanakkumar 

மதுரை மாறவே இல்லை....மனிதர்கள் மட்டும் வேகமாக மாறிக் கொண்டிருக்கின்றனர்.


 saravanakkumar 

அமுதும் தேனும் எதற்கு, முட்டை பரோட்டா இருக்கையிலே!  via @


 saravanakkumar 

அநேகமாய், எல்லோருமே என் கொண்டாட்டங்களுக்கு தடையாக இருக்கிறார்கள், சமயங்களில் நானே கூட...ம்ம்ம்ம்ம்


 saravanakkumar 

இப்போதெலலாம் புத்திசாலியாக காட்டிக் கொள்ள மெனக்கெடுவது முட்டாள் தனமாய் தோன்றுகிறது....ம்ம்ம்ம்ம்


 saravanakkumar 

போன திசம்பரில் திட்டமிட்ட புதுவருட தீர்மானங்களை மறுபடியும் தூசி தட்டி யோசிக்க வேண்டும்...தொட்டில் பழக்கம் :)


 saravanakkumar 

வருடம் போகிறது!, வயது போகிறது!, வாழ்நாளும் போகிறது!....கொண்டாட்டங்கள் மட்டும் தொடர்கிறது!


 saravanakkumar 

ட்விட்டரில் நூற்றி நாற்பது எழுத்துக்களில் என்னைச் சொல்வது எளிதாக இருக்கிறது....”சொல் வெட்டுக்கள்”


 saravanakkumar 

At the point of realisation, do not look into ur past;but focus on ur future.Use knowledge,not to dissect ur past;but to construct ur future


 saravanakkumar 

ஐந்தாண்டு காலமாய் தினமும் எழுதி வந்த எனது ப்ளாக்கை நிறுத்தியதுதான் இந்த வருஷத்து சாதனை. 1/3


 saravanakkumar 

தொடர்ந்து தினமும் வாசித்த ஆயிரம் பேருக்கும் மீண்டுமொரு முறை நன்றிகளும், வாழ்த்துக்களும்! 2/3