Tuesday, November 15, 2011

சித்தர்களும் பித்தர்களும் -2


ஒரு நெடிய தொடராக எழுதிட வேண்டுமென நினைத்து ஆரம்பித்த இந்த தொடரை இரண்டே பாகத்துடன் நிறுத்தி விட்டேன். ஏன் நிறுத்தினேன் என்பதற்கு இப்போது நிறைய காரணங்களைச் சொல்லலாம்தான்....ஆனால் அவை எல்லாம் என்னுடைய சோம்பேறித்தனம் என்கிற ஒன்றுக்கு சப்பை கட்டுவதாக அமையும். சில விஷயங்கள் முற்றுப் பெறாமல் இருப்பதுதானே அழகு! :)THURSDAY, APRIL 10, 2008

சித்தர்களும் பித்தர்களும் -2

இந்த தொடரை எழுத துவங்கிய பின்னரே, இனையத்தில் சித்தர்களை தேடினேன்...ஏகப்பட்ட விவரங்களுடன் பலர் எழுதியிருந்ததை காண முடிந்தது. ஏற்கனவே பலர் எழுதியதை திரும்ப எழுதுவதை காட்டிலும் இதுவரை சொல்லாத சில செய்திகளை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

சித்தர்களின் எண்ணிக்கை குறித்து ஆளுக்கு ஒரு பட்டியலை நீட்டினாலும், எல்லா பட்டியலிலும் காணக்கிடைப்பது கோரக்காநாதர், மச்சேந்திரர் ஆகிய இருவர் மட்டுமே.பதினெட்டு சித்தர்கள் என்பது தத்துவார்த்தமான ஒரு குறியீடாகவே இருந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

சித்தர்களிடையே காணப்படும் மற்றொரு பொதுத்தன்மை அவர்கள் கடவுள் வழிபாட்டினையோ, ஆராதனைகளையோ, இறைவனின் புகழ் பாடுவதையோ தவிர்த்திருக்கிறார்கள் என்பதே. கடவுளை வடிவநிலை படுத்தாது கருத்துநிலை படுத்தினர் என்பதுதான் உண்மை. சிவன் என்கிற பெயர் குறியீடாக குறிக்கப்பட்டதே தவிர பெரும்பாலான நேரங்களில் அது என்றே தங்களின் இறைவனை குறிப்பிடுகின்றனர். தத்துவம் என்றால் தத்= சிவன், துவம்= அதன் மெய்யியல்புகளை குறிப்பது ஆகும்.

சிவனாகிய குருவின் தொடர்ச்சியான சீடர்களே சித்தர் பரம்பரையினராய் அறியப்படுவது எந்த அளவிற்கு குரு சிஷ்யபரம்பரை முக்கியமானதாய் இருந்திருக்கிறது எனபதை புலப்படுத்தும். குருவுடன் ஒன்றுவதே பிராதனமாயும் அதை குருயோகம் என்றும் அறியத்தருகின்றனர். குருவானவர் தனது சீடனுக்கு மெய்ஞானத்தை நோக்கவும்,பயிலவும், சோதிக்கவும், சிந்திக்கவும், தியானிக்கவும்,பயிலவும் அனுபவித்து உணரவும் உதவிசெய்கிறார்.

குருவும் அவரின் தன்மையையொட்டி பலவகையாக அறியப்படுகிறார்.

பிரேரகர்கள் - சாதனைகளின் பயன்கள்,சிறப்புகளை சாதகர்களுக்கு சொல்லி ஊக்குவிப்பவர்

சூசகர்கள் - சாதனைகளை துவங்கிவைத்து அதன் நோக்கத்தை உணர்த்துபவர்

வாசகர்கள் - சாதனைகளையும் அதன் நோக்கங்களை விளக்கி காட்டுபவர்

தர்சகர்கள் - சாதனைகளை தெளிவாகவும் உறுதியாகவும் எடுத்துக்காட்டி நோக்கங்களை உணர்த்துபவர்

சிக்க்ஷகர்கள் - சாதனைகளையும் அவற்றின் குறிக்கோளையும் போதிப்பவர்

போதகர்கள் - சாதனைகளைப்பற்றியும் நோக்கங்களை பற்றியுமான உண்மை ஞானத்தை உணர்த்துபவர்கள்

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் சித்தர்கள் பாலவர்க்கம், மூல வர்க்கம்,கயிலாயவர்க்கம் மூன்று வகையாக கருதப்படுகின்றனர்.

பாலவர்க்கத்தினருக்கு முதல்வனாய் முருகபெருமானார் கருதப்படுகிறார். இவருக்கு சித்தசேனன் என்கிற பெயரும் உண்டு.இவர்கள் குண்டலினி சக்தியை மேம்படுத்திய முக்தர்கள் ஒருவகையில் குண்டலினி யோகிகள் என்றும் அழைக்கலாம்.

மூலவர்க்கத்தினருக்கு முதல்வனாய் திருமூலரை குறிப்பிடுகின்றனர்., இந்த மரபை நந்திவர்க்கம் என்றும் கூறுகின்றனர்.

திருமூலரும், கம்பளிசட்டை சித்தரும் கையிலாய வர்க்கம் என கூறிக்கொள்கின்றனர், இவர்களின் முதல்வனாக அகஸ்தியரை கூறுகின்றனர்.

இன்னொரு வகைப்பாட்டியலின் படி சித்தர்களை 'யோக சித்தர்', 'காயசித்தர்கள்', 'ரசவாத சித்தர்கள்' என பிரிக்கின்றனர். இதில் யோக சித்தர்கள் மற்றவரை விட உயர்ந்த நிலையை எட்டியவர்கள். யோகத்தின் மூலம் இறைவனை அடைய முயல்பவர்கள். காய சித்தர்கள் என்பார் தங்கள் உடலை வலுவுள்ளதாக்கி அழியாத தன்மையை பெற முயல்பவர்கள் இவர்களுக்கு முக்தி பெரிதில்லை. ரசவாத சித்தர்கள் மருத்துவத்திலும், உலோகவியலிலும் தேர்ச்சியனவர்கள்.

நமக்கு கிடைத்துள்ள பாடல்கள் ஒரு துளியாகத்தான் இருக்க வேண்டுமெனவும், சித்தர் பாடல்களை அழிப்பதையே தங்கள் நோக்காக கொண்ட சைவசித்தாந்திகளை பற்றிய தகவலும் அறியக்கிடைக்கிறது. இன்றைக்கு தொகுக்கப்பட்டிருக்கும் சித்தர் பாடல்கள் அனைத்துமே செவிவழியாக அறியப்பட்டு 16ம் நூற்றாண்டுக்கு பின்னரே ஓலைச்சுவடிகளில் சேகரிக்கப்பட்டிருக்கலாம் என்கிற கருத்தும் இருக்கிறது.

தொடரும்....

சித்தர்களும் பித்தர்களும் -1


புதிதாக இங்கே எழுதுவதை விட எனது பழைய எழுத்துக்களை தொகுப்பதே சுலபமாக இருக்கிறது.அந்த வரிசையில் கடந்த 2008ல் எழுதிய ஒரு ஆக்கம். எந்த வித திருத்தலும் இல்லாமல் அப்படியே மீள் பிரசுரித்திருக்கிறேன். என்னுடைய எழுத்து எப்படி மேம்பட்டிருக்கிறது என்பதை நான் அறிந்து கொள்ள இந்த கட்டுரைகள் எனக்கு அளவு கோலாக இருக்கும் என நினைக்கிறேன்.MONDAY, MARCH 17, 2008சித்தர்களும், பித்தர்களும்...1

சித்தர்களை பற்றி எழுதுவதாய் வாக்குக் கொடுத்தபின்னர்...எதிலிருந்து ஆரம்பிப்பது என்கிற குழப்பம் நிறையவே இருந்தது....இருக்கிறது. சித்தர்களின் உலகம் மிகவும் விஸ்தீரனமானது. அவர்களை பற்றி நாம் அறிந்ததும், தொகுத்ததும், பதிந்ததும் மிகக்குறைவே....இதனால் பல்வேறு கருத்தியல்களும், முரன்பாடுகளும்...தெளிவின்மையும் நிறையவே தேங்கிக் கிடக்கிறது.....பொதுவில் நான் நேர்மையாக உணர்ந்த விதயங்களை மட்டும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்...தவறிருப்பின் தயங்காமல் சுட்டிடுங்கள்...திருத்திக்கொள்கிறேன்.

சித்தம் என்கிற தமிழ் பதம் மனம் மற்றும் அது தொடர்பான பகுப்புகளை உள்ளடக்கியது என்றாலும், சித்தர்கள் தங்களின் சமகால வாழ்வியல் சூழல்களில் இருந்து விலகியவர்களாகவும், வேறுபட்டவர்களாகவும் வாழ்ந்திருக்கின்றனர் என்பதுதான் உண்மை. பிறர் சாராத தேடலில் தாங்கள் கண்டுணர்ந்தவைகளை தங்களளவில் புடம்போட்டு புதிய பரிமாணங்களை உருவகித்துப் பார்த்தவர்கள். அவர்களுடை ஆன்மீக தேடல் நிச்சயமாய் ஆராதனைகளோடோ, வழிபாடுகளுடனோ சம்பந்தப்படவில்லை. தனிமையையும், நிலைத்திருத்தலையுமே அவர்கள் பிரதானமாய் கருதினர் எனலாம்.

சித்தர்களின் கூற்றுப்படி நமது உடலான ஐந்து நிலைகளை கொண்டது...அதாவது 1.பரு உடல், 2.வளி(உயிர்ப்பு) உடல், 3.மன உடல், 4.அறிவு உடல், 5.ஆன்ம உடல் ...இந்த ஐந்து நிலைகளை கடந்தவரே சித்தராய் ஆகமுடியும் என்றும், இந்த நிலை இறையோடு இறையாய் கலந்த உயர்ந்த நிலை என்றும் இந்த நிலைக்கு அழிவில்லை என்பதாக வலியுறுத்துகிறார்கள். அதாவது சித்தர்கள் அனைவரும் இன்றைக்கும் நம்முடனே வாழ்ந்து வருகின்றனர் என்று கூட கொள்ளலாம்.

சித்தர்களின் மரபு எங்கிருந்து துவங்குகிறது என பார்த்தோமானால், முதல் சித்தனாகிய சிவன் தனது இனையான சக்திக்கு குண்டலினி எனும் பிராணயாமத்தை கற்றுக்கொடுத்ததில் இருந்து துவங்குகிறது. சிவனின் நேரடி சீடர்களாய் அகத்தியர், நந்திதேவர், திருமூலர் ஆகிய மூவரைத்தான் சொல்கிறார்கள். இவர்கள் மூவரும் தமிழர்கள் என்பதும் அதில் இருவர் தமிழகத்திலேயே சமாதியானதாகவும் தெரிகிறது. நந்திதேவர் காசியில் சமாதியானதாய் சொல்கிறார்கள்.

தமிழ் மரபியலில் சித்தர்கள் பதினெட்டு பேர் என்றும், வட இந்தியாவில் 84 பெயரை கூறுகின்றனர். தமிழ் நூலியலில் பதினெட்டு பேர் யார் என்பதில் நிறையவே குழப்பங்கள் இருக்கின்றன...ஆளாளுக்கு ஒரு பட்டியலை நீட்டினாலும், பா.கமலகண்ணன் என்கிற ஆய்வாளர் இதுவரை ஒரு லட்சம் சித்தர்களின் பாடல் தொகுக்கப்பட்டுள்ளதாகவும் அதன் படி சித்தர்களின் எண்ணிக்கை 102 என புதிய தகவலை தருகிறார். மேலும் போகநாதர் எழுதிய 'போக்ர் ஏழாயிரம்' என்கிற நூலின் ஆறாவது காண்டத்தில் 696-953 வரையிலுள்ள பாடல்களில் 42 சித்தர்களை பற்றிய தகவல்கள தரப்பட்டுள்ளதாக கூறுகிறார்.

இந்த சித்தர்கள் ஒரே மாதிரியான கோட்பாடுகளை உடையவர்களா என பார்ப்போமெனில் ஆச்சர்யமான சில உண்மைகளை காணலாம்...திருமூலர் போன்றவர்களின் குரல் ஆன்மீக சைவக் குரலாகவும், சிவ வாக்கியர் மாதிரியானவர்கள் இதற்கு எதிரான நிலைப்பாடுள்ளவர்களாகவும், பட்டினத்தார் போன்றவர்கள் ஆனாதிக்கத்தின் பிம்பமாயும், சிலர் தலித்திய் சிந்தனைக்காரகளாகவும்...ஏன் இடதுசாரி கருத்துக்களை உடையவர்களாகவும் பகுக்க முடியும்....

பொதுவில்....அகங்காரத்தில் இருந்து விடுதலை, தன்னை அறிதல், அதிகாரங்கள், அதிகார மைய்யங்களுக்கு எதிரான போக்கு அல்லது ஆதிக்க எதிர்ப்பு, எல்லாவற்றிலிருந்தும் விட்டு விடுதலையாகி தனித்திருத்தல், சடங்குகளை எதிர்ப்பது, வழிபாடுகளை புறக்கணித்தல், தனித்துவமான மருத்துவம், யோகக்கலை போன்றவைகளைன் அடையாளமாகவே சித்தர்களை பார்க்க முடிகிறது....

மேலும் விவரங்களுடன் அடுத்த பதிவில் தொடர்வோம்....

Friday, November 11, 2011

அபூர்வமாய்க் கிடைத்த ஒன்று!

இந்தப் படம் நிஜமோ அல்லது போட்டோஷாப் பண்ணியதோ நானறியேன். ஆனாலும் பார்த்த மாத்திரத்தில் ஆச்சர்த்தையும், இதழோர புன்னகையையும் தந்த படம். இது உண்மையாக இருக்குமானால் காந்தியின் முகத்தில் தெரியும் குழந்தைத் தனமான உற்சாகம் எனக்குப் பிடித்திருக்கிறது.

ஒரே ஒரு வருத்தம்தான், காந்திக்குக் கிடைத்தது எனக்கு இதுவரை கிடைகக்வில்லை. அந்த வகையில் காந்தி கொடுத்து வச்ச மஹராசன்.... :))

கொஞ்சம் வயிற்றெரிச்சல், கொஞ்சம் பொறாமை, நிறைய ஆச்சர்யத்துடன் இந்த படத்தினை பகிர்ந்து கொள்கிறேன்.


Wednesday, November 9, 2011

இராமாயணம் உண்மையா?


எனது பழைய எழுத்துக்களை ஒரே இடத்தில் சேகரிக்கும் முயற்சியில் இந்தக் பதிவினை இங்கே மீள் பதிப்பிக்கிறேன். முதலாவது கட்டுரை விடுதலை நாளிதழ்  தளத்திலிருந்து சேகரிக்கப் பட்டது.Wednesday, September 19, 2007

இராமாயணம் உண்மையா?...சில குறிப்புகள்

இராமாயணத்தைப் பற்றியும், மற்றும் பார்ப்பனர்களின் வேத சாஸ்திர புராணங்களைப் பற்றியும் சரித்திர ஆராய்ச்சியளார்களும், பேரறிஞர்களும் கூறியுள்ள கருத்துகளைத் தொகுத்துக் கீழே தந்திருக்கிறோம்.


தென்னிந்தியாவில் வசித்து வந்த ஆரியரல்லாதவர்களையே குரங்குகள் என்றும், அசுரர்கள் என்றும் இராமாயணக் கதையில் எழுதி வைக்கப் பட்டிருக்கிறது(ரொமேஷ் சந்திர தத்தர் சி.அய்.ஈ., அய்.சி. எஸ்.எழுதிய புராதன இந்தியா- 52 ஆவது பக்கம்)திராவிடர்கள் தங்கள் மீது படையெடுதது வந்த ஆரியர்களோடு கடும் போர் புரிய வேண்டியிருந்தது. இந்த விஷயம் ரிக் வேதத்திலேயே அநேக சுலோகங்களாக இருக்கின்றன.(டாக்டர் ரொமேஷ் சந்திர மஜூம்தார் எம்.ஏ. வின் பூர்வீக இந்திய சரித்திரமும் நாகரிகமும் 22 ஆவது பக்கம்).


இராமாயணக் கதை என்பது ஆரியர்கள் தென் இந்திய தஸ்யூக்கள் அல்லது திராவிடர்கள் மீது படையெடுத்து வெற்றி பெற்றதைச் சித்தரித்துக் காட்டுவதாகும்.(பி. சிதம்பரம் பிள்ளை எழுதிய, திராவிடரும் ஆரியரும் 24 ஆவது பக்கம்).


இராமாயணக் கதையானது புரோகித வகுப்பாருக்கும் யுத்த வீரர்களுக்கும் நடந்த போரைக் குறிப்பதாகும். இராமாயணத்தில் குறிக்கப்பட்டுள்ள குரங்குகள், கரடிகள் என்பவை தென் இந்தியாவில் உள்ளவர்களை - ஆரியர்களல்லாதவாகளையே குறிப்பதாகும்.(ரொமேஷ் சந்திர தத்தர் எழுதிய, பண்டைய இந்தியாவின் நாகரிகம் 139-141 ஆவது பக்கம்).


தென் இந்தியாவில் இருந்த மக்களேதான் இராமாயணத்தில் குரங்குகள் என்றும், அசுரர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
(சுவாமி விவேகானந்தர் அவர்களது சொற்பொழிவுகளும், கட்டுரைகளும் - இராமாயணம் என்னும் தலைப்பில் 587-589 ஆவது பக்கம்). 
ஆரியன் என்கிற பதம் இந்தியாவின் புராதனக் குடி மக்களிடமிருந்து தங்களைப் பிரித்துக் காட்டுவதற்காக ஆரியர் ஏற்படுத்திக் கொண்ட பதம்.தஸ்யூக்கள் என்பது இந்தியப் புராதனக் குடிமக்களுக்கு அவர்கள் (ஆரியர்கள்) கொடுத்த பெயராகும்.
(1922 - ஆம் ஆண்டு பிரசுரிக்கப்பட்ட கேம்பிரிட்ஜ் பழைய இந்தியாவின் சரித்திரம் என்னும் புத்தகத்தில்).


ஆரியரல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர் (சூத்திரர்)கள் என்றும், தஸ்யூக்கள், அசுரர்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஆரியருக்கும் ஆரியரல்லாதாருக்கும் இருந்து கொண்டிருந்த அடிப்படையான பகைமையைப் பற்றி ரிக் வேதத்தில் பல இடங்களில் காணலாம். இரு வகுப்பாருக்கும் இருந்த கலை வேற்றுமையும் அரசியல் வேற்றுமையுமே இந்தப் பகைக்குக் காரணமாகும்.
(டாக்டர் ராதாகுமுத முக்கர்ஜி எம். ஏ., பிஎச்.டி., எழுதிய இந்து நாகரிகம் என்னும் புத்தகத்தில் 69 ஆவது பக்கம்).


இராமாயணக் கதையின் உட்பொருள் என்னவென்றால் ஆரிய நாகரிகத்திற்கும், ஆரியரல்லாத நாகரிகத்திற்கும் (அவற்றின் தலைவர்களான இராமன், இராவணன் ஆகியவர்களால் ) நடத்தப்பட்ட போராட்டமாகும்.
(டாக்டர் ராதாகுமுத முக்கர்ஜி எம். ஏ., பிஎச்.டி., எழுதிய இந்து நாகரிகம் என்னும் புத்தகத்தின் 141 ஆவது பக்கம்).


தமிழர்கள் என்பவர்கள் இந்தியாவின் தென்கிழக்கிலும் இலங்கையின் சில பாகத்திலும் வசிக்கும் ஆரியரல்லாத திராவிட மக்கள் ஆவார்கள். தமிழ் என்பது மேற்படியார்களால் பேசப்படும் பாஷை
(சர் ஜேம்ஸ்மர்ரே எழுதிய இங்கிலீஷ் அகராதியின் பக்கம் 67 இல் இருக்கிறது.)


ஆரியர்கள் தங்கள் மொழியை ஆரியரல்லாதாருக்குள் புகுத்த முயற்சித்து, முடியாமல் போனதால், ஆரியரல்லாதாருடைய பாஷைகளைக் கற்றுக் கொண்டு, அவர்களது நாகரிகத்தையும் பின்பற்ற வேண்டி வந்தன.
(பண்டர்காரின் கட்டுரைகள் வால்யூம்-3, பக்கம் 10)


தமிழர்கள், ஆரியர்களை வடவர், வடநாட்டார் என்று அழைத்தார்கள். ஏனெனில், ஆரியர்கள் வடக்கே இருந்து வந்தவர்களானதால்.
(டாக்டர் கிருஷ்ணசாமி அய்யங்கார், எம்.ஏ., பிஎச்.டி., அவர்கள் எழுதிய தென்னிந்தியாவும் இந்தியக் கலையும் என்ற புத்தகத்தின் 3 ஆவது பக்கம்)


இராமாயணத்தில் தென்னிந்தியா (திராவிட தேசம்) தஸ்யூக்கள் என்ற ராட்சதர்களுக்குச் சொந்தமாக இருந்தது. இவர்கள் (தென் இந்தியர்கள்) வட இந்தியாவில் இருந்து வந்த ஆரியர்களைப் போலவே நாகரிகம் அடைந்தவர்களாய் இருந்தார்கள்.
(பி.டி.சீனிவாசய்யங்கார் எழுதிய இந்திய சரித்திரம், முதல் பாகம் என்னும் புத்தகத்தின் 10 ஆவது பக்கம்).


திராவிடர்களை ஆரியர்கள் வென்றுவிட்ட அகங்காரத்தால் குரங்குகள் என்றும், கரடிகள் என்றும், ராட்சதர்கள் என்றும் எழுதி வைத்தார்கள். ஆனால், இந்தப்படி இழிவு படுத்தப்பட்ட வகுப்பாரிடமிருந்தே (திராவிடர்களிடமிருந்தே) பல நாகரிகங்களை இந்தப் பிராமணர்கள் கற்றுக் கொண்டார்கள்..
(ஜோஷி சந்தர் டம் எழுதிய இந்தியா அன்றும் இன்றும் என்னும் புத்தகத்தின் 15 ஆவது பக்கம்).


அசுரர்கள் யார்ஆரியக் கடவுளாகிய இந்திரனையும் இதரக் கடவுள்களையும் பூசித்தவர்களும் அவர்களைப் பின் பற்றியவர்களும் தேவர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள். இந்த ஆரியக் கடவுள்கள் வணக்கத்தை எதிர்த்தவர்களை அசுரர்கள் என்று அழைத்தார்கள். இந்த இரு கூட்டத்தாருக்கும் விடாப் பகை இருந்து கொண்டே இருந்தது.
(ஏ.சி.தாஸ். எம்.ஏ.,பி.எல்., எழுதிய ரிக் வேத காலத்து இந்தியா என்னும் புத்தகத்தில் 151 ஆவது பக்கம்.)


ஆரியர்களால் வெல்லப்பட்ட எதிரிகளாகிய திராவிடர்களை, தங்களுடைய புத்தகங்களில் திராவிடர்கள் - தஸ்யூக்கள் என்றும், தானவர்கள் என்றும், ராட்சதர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆரியக் கவிகள் திராவிடர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பை இது காட்டுகிறது. ஏனெனில், ஆரியர்கள் திராவிட நாட்டில் சிறுகச் சிறுக நுழைந்து, ஆதிக்கம் பெறுவதில் அடைந்த கஷ்டத்தினால் இப்படி எழுதினார்கள்.
(சி.எஸ். சீனிவாசாச்சாரி, எம்.ஏ., எம்.எஸ்., ராமசாமி அய்யங்கர், எம்.ஏ., ஆகிய சரித்திரப் போதகர்கள் எழுதிய, இந்திய சரித்திரம் - முதல் பாகம் என்னும் புத்தகத்தில் இந்து இந்தியா என்னும் தலைப்பில் 16, 17 ஆவது பக்கங்கள்).


ஆரியர்களில் சமஸ்கிருதம் பேசியவர்கள் மட்டும் இந்தியாவின் மேற்குக் கணவாய் வழியாக நுழைந்து, வட இந்தியாவை அடைந்தார்கள். அங்கு தங்களை விட முன்னேற்றமாக திராவிடர்களைக் கண்டு அவர்களிடமிருந்து பல நாகரிகங்களைக் கற்றுக் கொண்டார்கள்.
(எச்.ஜி. வெல்ஸ் எழுதிய உலகத்தின் சிறு சரித்திரம் என்னும் புத்தகத்தின் 105 ஆவது பக்கம்).


ஜாதிப் பிரிவுகள் நான்கில், அதாவது பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்பவர்களில் முதல் மூன்று பிரிவினர்கள் ஆரிய சம்பந்தப்பட்டவர்கள். கடைசி வகுப்பார் (சூத்திரர்கள்) இந்தியாவின் புராதனக் குடிகள்.
(நியூ ஏஜ் என்சைக்ளோபீடியா வால்யூம். 2 (1925) பக்கம் 273)


இராமாயணம், மகாபாரதம் எனும் இரண்டு இதிகாசங்களும் ஆரியர் பரவிய பருவங்களை வெகு தெளிவாகக் குறிப்பிடுகின்றன.மகாபாரதம் கங்கைநதி வெளியில் ஆரியர்கள் பரவியதையும், இராமாயணம் தென்னிந்தியாவை அவர்கள் கைப்பற்றியதையும் உணர்த்துகின்றன.
(முன்பு கல்வி அமைச்சராக இருந்த கனம் சி.ஜே. வர்க்கி எம்.ஏ., எழுதிய இந்திய சரித்திரப் பாகுபாடு என்னும் புத்தகத்தின் 15 ஆவது பக்கம்).


சுருங்கக் கூறவேண்டுமானால், பிராமணர்கள் கல்வியைத் தங்களுக்கே சொந்தமாக்கிக் கொண்டு, அந்த நிலைமையைத் துஷ்பிரயோகப்படுத்தித் தங்கள் இஷ்டம் போல், எல்லாம் தங்களுக்கு அநுகூலமான சகல விஷயங்களையும் உட்படுத்திக் கட்டுக் கதைகளை எழுதி வைத்துக் கொண்டார்கள். இந்த கற்பனைக் கதைகள் அனைத்தும் வேண்டுமென்றே கெட்ட எண்ணத்துடன் சாமர்த்தியமாய்ப் பிறரை அழுத்தி அடிமைப்படுத்தித் தங்களுடைய நிலையை உயர்த்திக் கொள்வதற்காகவே எழுதப் பட்டவைகளாகும்.
(பிரபல சரித்திர ஆசிரியரான ஹென்றி பெரிட்ஜ் என்பவர் 1865 இல் எழுதிய விரிவான இந்திய சரித்திர முதற் பாகம் என்னும் புத்தகத்தின் 15 ஆவது பக்கம்.)


விஷ்ணு என்கிற கடவுள் ஆரியக் கூட்டத்தாருக்கு வெற்றி தேடிக் கொடுக்கவும், யோசனை கூறவும் அடிக்கடி அவதாரம் செய்வதாகக் கருதப்பட்டது.
(இ.பி.ஹரவெல் 1918 இல் எழுதிய இந்தியாவில் ஆரியர் ஆட்சியின் சரித்திரம்என்னும் புத்தகத்தின் 32 ஆவது பக்கம்.)


பாரத இராமாயணங்கள் முதலிய இதிகாசங்களில் காட்டு மிராண்டிகளும், அசுரர்களும், ராட்சதர்களும், தஸ்யூக்களும் வசிக்கும் நெருக்கமான காடுகள் கொண்ட நாடு என்று குறிப்பிட்டிருப்பதெல்லாம் தென்னிந்தியாவை - திராவிட நாட்டைப் பற்றியே யாகும்.
(ஜி.எச். ராபின்சன், சி.அய்.ஈ. யால் எழுதப்பட்ட இந்தியா என்னும் புத்தகத்தின் 155 ஆவது பக்கம்).வட இந்தியாவில் இருந்த திராவிடக் கலை, நாகரிகம் முதலியவை யாவும் ஆரியர்களால் அழிக்கப்பட்டு விட்டன. ஆனால், தென்னிந்தியாவில் அவ்விதம் நடக்க வில்லை.
(தமிழ்ப் பேராசிரியர் கே.எம். சிவராஜ பிள்ளை, பி.ஏ., எழுதிய பண்டை தமிழர்களின் வரலாறு என்னும் புத்தகத்தின் 4 ஆம் பக்கம்.)


பாரதத்தில் இடும்பி என்று ஒரு ஆரியரல்லாத பெண் மணியைப் பற்றி எழுதிய பார்ப்பனக் கவி, தனக்குள்ள ஜாதித் துவேஷத்தால் இராட்சசி என்று எழுதியிருக்கிறான். இராட்சதன் என்கிற பயங்கர புரளி வார்த்தை வைதீகப் பார்ப்பனனின் மூளையில் தோன்றிய கற்பனையேயாகும்.
(நாகேந்திரகோஷ், பி.ஏ.,பி.எல். எழுதிய இந்திய ஆரியரின் இலக்கியமும் கலையும் என்ற புத்தகத்தின் 194 ஆவது பக்கம்).


இராமாயணத்தில் குடிகாரர்களை சுரர்கள் என்றும், குடியை வெறுத்தவர்களை அசுரர்கள் என்றும் பிரித்துக் கூறப்பட்டிருக்கிறது.
(ஹென்றி ஸ்மித் வில்லியம், எல்.எல்.டி., எழுதிய சரித்திரக்காரர்களின் உலக சரித்திரம் வால்யூம் 2 இல், பக்கம் 521).


இந்தியாவின் தென் பாகத்திலுள்ள நாடுகளை நோக்கிப் பிராமணர்கள் வெற்றியோடு வரும்போது ஆந்திர, சேர, சோழ, பாண்டிய ஆகிய நாடுகள் மிக்க நாகரிகமான நிலையில் இருப்பதைக் கண்டார்கள்.(வின்சென்ட் ஏ. ஸ்மித் ஆக்ஸ்ஃபோர்டு எழுதிய இந்திய சரித்திரம்
14 ஆவது பக்கம்).


இந்தியாவிலுள்ள ஆரியர்களிடம் மனிதனைக் கொன்று யாகம் செய்யும் வழக்கம் இருந்திருக்கிறதென்று நிச்சயமாகச் சொல்லலாம்.(இம்பீரியல் இந்தியன் கெஜட் 1909 ஆம் வருடத்திய பதிப்பு வால்யூம் 1 இல் 405 ஆவது பக்கம்.)


நன்றி - 'விடுதலை'

Thursday, September 20, 2007

இராமாயணம் உண்மையா?...சில குறிப்புகள்-2

இராமாயணம் உண்மையா?...சில குறிப்புகள் 


தொடர்ச்சி....


ஆரியல்லாத இந்த நாட்டுப் பழங்குடி மக்கள் ஆரியர்களால் காடுகளுக்குத் துரத்தப்பட்டார்கள். இதுவும் போதாதென்று அவர்களை ராட்சதர்கள், அசுரர்கள் என்றும் ஆரியர்களும், ஆரியப் புரோகிதர்களும் நூல் எழுதி வைத்தார்கள். ஆரியரல்லாதவர்களுக்கு இவர்கள் ஆதியில் இட்ட தஸ்யூக், ஆரிய எதிரி என்ற பெயர்கள்தான் நாளடைவில் பிசாசு, பூதம், ராட்சதன் என்ற பெயர்களாக மாறிவிட்டன.(சர். வில்லியம் வில்சன்ஹண்டர், கே.சி.எஸ்.அய்., சி.அய்.ஈ., எம்.ஏ., ஆக்ஸன் எல்.எல்.டி எழுதிய இந்திய மக்களின் சரித்திரம் என்னும் நூலின் 41 ஆவது பக்கம்).


இராமாயணக் கதையானது ஆரியர்களை மேன்மையாகக் கூறவும், திராவிடர்களை இழிவு படுத்திக் காட்டவும் எழுதப்பட்ட நூலாகும்.(பண்டிதர் டி. பொன்னம்பலம் பிள்ளையால் எழுதப்பட்ட மலபார் குவாட்டர்லி ரிவ்யூ என்னும் புத்தகம்).


நம்மைச் சுற்றி நாலு பக்கங்களிலும் தஸ்யூக் கூட்டத்தார் (திராவிடர்கள்) இருக்கிறார்கள். அவர்கள் யாகங்களைச் செய்வதில்லை. ஒன்றையும் நம்புவதில்லை; அவர்களுடைய பழக்க வழக்கங்களே வேறாக இருக்கின்றன. ஓ! இந்திரனே, அவர்களைக் கொல்லு; தாசர் வம்சத்தை அழித்துவிடுவாயாக.(ரிக் வேதம் அதிகாரம் 10 சுலோகம் 22-8).


ஆரியர்களின் ஒழுக்க ஈனமான காரியங்களில் எல்லாம் சிறந்த காரியங்கள் மதுவருந்துவதும் சூதாடுவதுமாகும். ரிக் வேதத்தில் இதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன.(ராகோசின் எழுதிய வேதகால இந்தியா என்னும் புத்தகம்).


இந்திய அய்ரோப்பியர்களால், அதாவது, ஆரியர்களால் தோற்கடிக்கப்பட்ட கறுப்பு மனிதர்கள் (திராவிடர்களை) தஸ்யூக்கள் என்றும் கொள்ளைக்காரர்கள் என்றும், அடிக்கடி பிசாசுகளாக மாறக் கூடியவர்கள் என்றும் வேத இலக்கியங்களில் கூறப் பட்டிருக்கிறது.(பால்மாசின் அவர்செல் எழுதிய புராதன இந்தியாவும் இந்தியாவின் நாகரிகமும் என்ற புத்தகத்தின் 19 ஆவது பக்கம்.)


மேற்கு திபெத்தையும், ஆஃப்கானிஸ்தானத்தையும் தாண்டி, முதன் முதல் இந்தியாவுக்குள் வந்த ஆரியர்கள், சமஸ்கிருதத்தைப் போன்ற ஒரு பாஷையைப் பேசினார்கள். இந்தியாவிற்குள் ஆதியில் நுழைந்த இவ் வெள்ளையர்கள் மக்கள் கொள்கைகள், பழக்க வழக்கங்கள், கவிதைகள், மத நம்பிக்கைகள் முதலியவைகளை அப்பாஷையிலேயே எழுதி வைத்துக் கொண்டார்கள்.(சர் ஹென்றி ஜான்ஸ்ட்டன், ஜி.சி.எம்., ஜி.கே.சி.ஈ., 1937 இல் எழுதிய இந்தியாவில் அன்னியர்கள் என்ற புத்தகத்தின் 19 ஆவது பக்கம்.)


இராமாயணமும், மகாபாரதமும் இந்தோ-ஆரியர் காலத்தையும், அவர்களுடைய வெற்றிகளையும், உள்நாட்டுச் சண்டைகளையும் பற்றிக் கூறுவதாகும் . . . இவைகள் உண்மையென்று நான் நம்பியதேயில்லை. பஞ்சதந்திரம், அராபியன் நைட் முதலிய கற்பனைக் கதைகளைப் போன்றவை என்பதே என் கருத்து.(பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் எழுதியுள்ள டிஸ்கவரி ஆஃப் இந்தியா பக்கம் 76-77).


இராமாயணம் என்பது தென்னிந்தியாவில் ஆரியர் பரவியதைக் குறிப்பதாகும்.(டிஸ்கவரி ஆஃப் இந்தியா பக்கம் 82)


ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்ததனால் புதிய பிரச்சினைகள் கிளம்பின. இனத்தாலும், அரசியலாலும், மாறுபாட்ட திராவிடர்கள், ஆரியரால் தோற்கடிக்கப்பட்ட திராவிடர்கள் நீண்ட கால நாகரிகத்துடன் வாழ்ந்து வந்தபடியால், இவர்களை விடத் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்ட ஆரியர்களுக்கும் இவர்களுக்கும் இடையே விரிந்த - பெரிய - பிளவு ஏற்பட்டது.(டிஸ்கவரி ஆஃப் இந்தியா பக்கம் 62).


இராமாயணம் ஒரு கட்டுக்கதைதான். வால்மீகியின் கற்பனையின் விளைவாகவே இராமாயணம் உண்டாயிற்று.(திரு. நீலகண்ட சாஸ்திரி).


இராமாயணம் என்ற கற்பனைக் கதையின் அடிப்படை யாதெனில், திராவிடப் பழங்குடி மக்களுக்கும், ஆரியப் படையெடுப்பாளருக்கும் இடையே நடந்த போராட்டமே தவிர வேறல்ல.(சர். ஃபிரோஸ்கான்நன் (முன்னாள் மேற்கு பஞ்சாப் முதலமைச்சர்) 1941 இல் எழுதிய இந்தியா என்ற புத்தகத்தில் பக்கம் 8).


இவ்வாரியப் பார்ப்பனர், ஏனைய வகுப்பினர் எல்லோரும் ஒன்று சேர்ந்துவிடாதபடி அவர்கட்குள் பல்வேறு சமயப் பிரிவு, சாதிப் பிரிவுகளை உண்டாக்கி, அவ்வொவ்வொரு பிரிவினரும் தத்தம் சமயமே, தத்தம் சாதியே உயர்ந்ததென்று சொல்லி, ஒருவரையொருவர் பகைத்துப் போராட வைத்து, அப்போராட்டத்துக்கு இடமாக இராமன் கதை - கண்ணன் கதை - கந்தன் கதை - விநாயகன் கதை - காளி கதை முதலிய பல்வேறு கட்டுக் கதைகளைத் தமது வடமொழியில் உண்டாக்கி வைத்து, அவற்றை ராமாயணம், பாரதம், பாகவதம், காந்தம் முதலிய புராணங்களாக உயர்த்தி வழங்கி, அவை தம்மை மற்றைய எல்லா வகுப்பினரும் குருட்டு நம்பிக்கையால் விடாப்பிடியாகப் பிடித்துக் கொள்ளும்படிச் செய்து விட்டார்கள்.(மறைமலையடிகள் அறிவுரைக் கொத்து)


ஆரியரின் இத்தகைய வெறியாட்டு வேள்விகளை அழித்து வந்த சூரன் - இராவணன் முதலான நிகரற்ற தமிழ் வேந்தர்களே, ஆரியர்களால் அரக்கர் என்று இகழ்ந்து பேசப்படுவாராயினர்.(மறைமலையடிகள் வேளாளர் நாகரிகம் பக்கம் 61).


ஆரியர் வாய்ந்த பார்ப்பனர்கள், கடவுள் அதோ, அவருக்கு நேரே வந்து அருள்புரிந்தார்; இதோ, இவருக்கு நேராக அருள்புரிந்தார் என்று பொய்யான புராணக் கதைகள் பலவற்றைக் கட்டி விட்டனர்.(மறைமலையடிகள் கடவுளுக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா பக்கம் 33-34.)


இராவணன் தேவர்களையும், ரிஷிகளையும் தொல்லைப் படுத்தியதாகக் கூறப்படுகிறது. அசரர் - தேவர் என்ற சொற்கள் இரண்டு விதமான இனத்தாரை - நாட்டாரை குறிப்பிடுவதாகும். ஆரியர்கள் தங்கள் இனத்தை தேவர்கள் என்றும், தங்கள் எதிரிகளை அசுரர்கள் - அரக்கர்கள் என்றும் வர்ணித்தார்கள்.(திரு ஜே.எம். நல்லுசாமிப் பிள்ளை இராமாயண உள்ளுரை பொருள் என்ற நூலின் முன்னுரையில்)


மத நம்பிக்கை ஒருபுறமிருக்க, இராமாயணக் கதையானது உவமையுரையோ சரித்திரமோ அல்ல; கட்டுக் கதையை அடிப்படையாகக் கொண்ட கவிதையே தான்.(கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி இந்திய சரித்திரம் முதல் பாகம் பக்கம் 34)


புதிய வரவினராகிய ஆரியர்க்கு அனுகூலராயும், பிரதி கூலராயுமிருந்த திராவிடப் பெருஞ்சாதி வகுப்பினரை ஆரியக் கவி அரக்கர் என்றும், குரங்கினம் என்றும் இறுத்துக் கூறியது, அவர்களுக்குரிய சாதித் துவேஷம், செய்நன்றி கொல்லல் ஆகிய குண தோஷத்தைக் குறிக்குமேயன்றி மற்றொன்னையுங் குறிப்பதன்று.(வெ.ப.சுப்பிரமணிய முதலியார் 1908 ஆம் ஆண்டில் எழுதிய இராமாயண உள்ளுரைப் பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும் பக்கம் 19)


இராமாயணம் கட்டுக் கதையாயினும், இராவணன் என்ற பாத்திரம் தலை சிறந்தது என்பதில் அய்யமில்லை. திராவிடர்கள் இராவணனை ஓர் இணையற்ற வீரனாகவும், தென்னிந்தியாவின் மீது ஆரியர் படையெடுத்ததைத் துணிவுடன் எதிர்த்து நின்ற பேரரசனாகவும் கருதியிருக்கின்றனர்.(எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை 1928 இல் எழுதிய இராவணப் பெரியார் பக்கம் 78). 


மகாபாரதத்தில் இருப்பது போலவே, இராமாயணத்திலும் கதாபாத்திரங்கள் யாவும் கற்பனைகளே. இரண்டிலும் சரித்திர சம்பந்தமானது ஒன்றுமேயில்லை.(ஆர்.சி. தத், பழைய இந்து நாகரிகம் பக்கம் 138)


அண்ணனைக் காட்டிக் கொடுத்துவிட்டுப் பட்டத்தைப் பெறும் தம்பி பக்தன் என்று சொல்ல முடியுமா? பக்தி என்றும், லோக நியாயம் என்றும் யுக்தி செய்து கொண்டு யாரும் எளிதிலே நாட்டுக்கும், சகோதரர்களுக்கும் துரோகம் செய்யத் துணிந்துவிடலாமே.


விபீஷணனுடைய செயலைப் பக்தியாகக் கொண்டாடும் தேசத்திலே தங்களை அறியாமலே ஆயிரக்கணக்கானவர்கள் தேசத் துரோகிகள் ஆகிவிட்டார்கள்.(வ.ரா. எழுதிய கோதைத் தீவு பக்கம் 24, 25).


புராணங்களும் - இதிகாசங்களும் மக்களின் மெய் சரித்திரமல்ல. இவை மக்கள் வரலாற்றை அறிவதற்கோ, சரித்திர உண்மைகளை அறிவதற்கோ ஆதாரமாகா. இவை வெறும் மத இலக்கியத் தொகுப்புகளே.
(திரு. முன்ஷி, இந்திய மக்களின் கலாச்சாரமும் - வரலாறும் பக்கம் 8)

யார் இந்த ஜெயராமன்?

நான்கு ஆண்டுக்ளுக்கு முன்னால் எழுதிய பதிவு இது. இதை புத்தக விமர்சனமாக எடுத்துக் கொண்டாலும் சரி, நாத்திக பேச்சாக எடுத்துக் கொண்டாலும் சரி....மனதுக்கு சரியென பட்டதை எழுதியிருக்கிறேன். 

Sunday, April 22, 2007


யார் இந்த ஶ்ரீராமன்...?


'சக்கரவர்த்தி திருமகன்' என்கிற பதம் ஜெயராமனுக்கு பொருந்துமா?

வால்மீகியின் ராமாயணத்தின்ன் ஆராய்ச்சியாளர் திரு.டி.அமிர்தலிங்க அய்யர் அவர்கள் தனது "Ramayana Vimarsana" என்கிற நூலில் பக்கம் 27ல் ராமனின் தந்தை தயரதனை பற்றியும் அவனது கோசல நாட்டின் பரப்பளவு பற்றி பின்வருமாறு கூறுகிறார்.
"Dasaratha, the son of AJA of Ikshvaku dynasty rules a petty inhabited country named koshala. it was one of the three hundred and odd kingdoms which jotted the fair face of Arya Vartha,between the Himalayas and the southern face of the vindhyas, and the Indus and Rajamahal hills. It might have been in extent about the size of modern Tanjore District....he was no more a Chakravarthi than Chakravarthi Rajagopalachari. "

எனவே சக்கரவர்த்தி திருமகன் என்கிற பட்டம் ராமனுக்கு எத்தனைதூரம் பொருந்தும் என்பதை நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள்.

பரதனுக்குத்தான் அரசுரிமை என்பது ஆரம்பத்திலேயே ராமனுக்கு தெரியுமா?

திரு.அமிர்தலிங்க அய்யர் தனது நூலில் ராமனுக்கு இது ஆரம்பத்திலேயே தெரியுமென்கிறார், தெரிந்தும் தனது தந்தையின் விருப்பத்தை ஏற்றுக்கொண்டான் என்கிறார்.தனது நூலில் பக்கம் 402ல் இது குறித்து பின்வருமாறு எழுதுகிறார்.
"That Rama knew about the promise made by Dasaratha to Kaikayee and her father, that the son born of her womb shall succeed to the throne, seems to be fairly certain. When Rama tells Bharatha of it in Chithrakoota, what was the source of his knowledge. It must have been the general talk of the city. Kausalya also suggests that all the harem knew of it. When dasaratha told Rama 'That very time when Bharatha was sent out of the city, the time had come for your coronation'.These words must have sharply reminded Rama of Bharatha's rights.Then why did not Rama remind his father,that his proposal was against the truth? Why did he accept the offer?"

மனைவியை பிரிந்த அவதாரபுருஷன் ஜெயராமனின் மனநிலை எத்தகையதாக இருந்தது?

வால்மீகியின் ராமாயணத்தின் ஆராய்ச்சியாளர் திரு.அமிர்தலிங்க அய்யர் இது குறித்த தனது பார்வையினை தனது நூலில் 406ம் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
"I Infer that Rama was not in a proper frame of mind like unto a monomaniac, till he actually landed at the head of a huge army on the outskirts of Lanka, and felt that he was in a fair way to be united with his wife.He behaved sanely in all matters which didnot intrude upon his obsession. Else he raves and rants, dosenot reason. What strikes him as the quickest and easiest way the shortest path must be trodden, good or bad, righteous or unrighteous.Whatever helps him is the righteous path; it is in such a frame of mind that Rama assassinated Vali"

இராவணனை போரில் வென்றவன் வாலி...அப்படியிருக்க அவன் உதவியை நாடாமல் காட்டுக்குள் மறைந்து வாழ்ந்த சுக்ரீவனை நாடியது ஏன்?

நியாயமான கேள்வி, மனைவியை மீட்க வேண்டி காட்டில் அலைந்து திரிந்த ராமனிடம் மாதங்க முனிவரின் ஆசிரமாத்திலிருந்த சவரி என்கிற மூதாட்டி, சுக்ரீவன் உனக்கு உதவலாமென கூறி அவன் மறைந்திருக்கும் இடம்பற்றி கூறுகிறாள்.சவரிக்கு நிச்சயமாய் வாலி-சுக்ரீவன் கதை தெரிந்திருகும், அவள் ஏன் வாலியைப் பற்றி சொல்லவில்லை அல்லது அவள் சொல்லி ராமன் சுக்ரீவனை தேர்ந்தெடுத்தானா என்பது விவாதத்திற்குறியது.

தனியனான ராமண்தான் சுக்ரிவன் இருக்குமிடம் தேடிச் செல்கிறான்...."கையறு துயரம் நின்னால் கடப்பது கருதி வந்தேம்" என இறைஞ்சும் குரலாகவே கம்பரும் ராமனை காட்டுகிறார்.ஆனால் சுக்ரீவனோ புத்திசாலித் தனமாய் தன் தமையனை வீழ்த்த தனக்கு கிடைத்த அடியாளாக ராமனை பார்க்கிறான். அவனை நைச்சியம் பண்ணும் வகையில் உன்னை சரணடைந்தேன் என்கிறான்.ராமனும் நீதி நியாயங்களை பற்றி யோசியாமல் சுக்ரீவனிடம் "போனவை போகட்டும் இனி உனக்கு துன்பம் எது வந்தாலும் காப்பேன்" என்கிறான்.

இதை திரு.அய்யர் தன் பார்வையில் இவ்வாறு கூறுகிறார்.பக்கம்260

"He thinks that vali is the obstacle in his way.How to get back seetha. If I go to vali I must go as a suppliant.I would have to bide his time and pleasure. If I kill vali and anoint sugreeva on the throne, sugreeva,apart from fear,out of gratitude will become my slave.Even if vali helps me he will take all the credit of recovering seetha.Where goed my fame and prestige.So,he made up his mind.There is no question of right or wrong, punya or papa "

சம்பூகனை ஜெயராமன் ஏன் கொன்றான்? அது சரியா?

சுக்ரீவனின் உதவி தேவைப்பட்டதால் வாலியை கொன்றான் என சப்பைகட்டு கட்டினாலும், ஒரு தவறும் செய்யாது காட்டில் தவம் செய்துகொண்டிருந்த சம்பூகனை ராமன் ஏன் கொல்ல வேண்டும். இது பற்றியும் திரு.அய்யர் அவர்களின் நூலில் 386ம் பக்கத்து வரிகளிலேயே பார்ப்போம்.
"The Disgusting story of the Brahman with the 5000 year old dead child. He accuses Rama that his child must have died at that early age insted of the usual 100,000 owing to some sin or negligence of duty by Rama.Rama in consternation seeks advice.Then the arch propounders of lies Naradha the devarishi and Agasthya the Brahmarishi,thell hism that,'a sudhra is performing thapas on the slopes of the vindhyas in your territory; an atrocious sin punishable with death'.Rama like a Creadulous fool lost his reasoning powers, called the pushpaka, went to sampooka(that is the name of the sudhra) and cut off his head and heypres to the child of the brahman revived at the very instant".


இந்த பதிவு ஶ்ரீராமனை பற்றிய முழுமையான பார்வை இல்லை....ஒரு குறிப்பிட்ட நூலின் வழியே ராமணை அனுகியிருக்கிறேன் அவ்வளவே....இதிலுள்ள நியாய அநியாயங்களை உங்களின் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்.....