Saturday, October 27, 2012

Notting Hill - "How Can You Mend A Broken Heart"

சில படங்களை எத்தனை தடவை பார்த்தாலும் அலுப்பதேயில்லை. ஒவ்வொரு முறையும் ஏதோவொரு புதிய அனுபவத்தை தரக்கூடியவை. அந்த வகையில் இன்று எத்தனையாவதோ தடவையாக Notting Hill பார்த்தேன்.
பிரிட்டனில் புத்தக கடை வைத்திருக்கும் ஒரு சாமானியனுக்கும், பிரபல அமெரிக்க நடிகை ஒருத்திக்குமான காதலை கவிதையாய்ச் சொல்லும்  ஒற்றை வரி  கதைதான் Notting Hill.

ஜூலியா ராபர்ட்ஸின் ஆகச் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று என அடித்துச் சொல்லலாம். ச்சட்சட்டென மாறும் முகபாவங்கள் அவற்றின் ஊடே அவர் சொல்ல வரும் விஷயஙகள் என இந்த படத்தின் நெடுகே அவரது பங்களிப்பு மகத்தானது. 

ஹூயூக் க்ராண்ட் வழக்கம் போல அப்போதுதான் தூங்கி எழுந்தவன் போலொரு முகபாவத்தோடு படம் முழுக்க உலா வந்தாலும், அந்த க்ளைமேக்ஸ் காட்சிகளில் அசத்தியிருப்பார். நம்மூர் நடிகர் கார்த்திக்கின் பல மேனரிசங்கள் இவருடைய நடிப்பில் இருப்பதை கவனிக்கலாம்.

இந்த பதிவை எழுதுவதன் நோக்கமே, இந்த படத்தோடு தொடர்புடைய மூன்று பாடல்களைப் பற்றித்தான். 

முதல் பாடல் பிரபல அமெரிக்க பாடகரான "Al Green" 1970 களில் பாடிய பாடலான "How Can You Mend a Broken Heart" என்ற பாடல். தமிழைத் தாண்டிய வெளியில் நான் பின் தொடரும் மிகச் சில பாடகர்களில் "Al Green" ம் ஒருவர். இந்த படத்தின் கதைக்கும், இந்த பாடல் தரும் உணர்வுகளுக்கும் அத்தனை பொருத்தமிருக்கிறது. பாடலை கேட்டுப் பாருங்கள்.


இரவின் தனிமையில், பாடலை மட்டும் திரும்பத் திரும்ப ஓடவிட்டு கேட்பது தனியொரு அனுபவம்....முயற்சித்துப் பாருங்கள்.

இந்த பாடலின் வரிகள்...

I can think of younger days when living for my life
Was everything a man could want to do
I could never see tomorrow, but I was never told about the sorrow

And how can you mend a broken heart?
How can you stop the rain from falling down?
How can you stop the sun from shining?
What makes the world go round?
How can you mend a this broken man?
How can a loser ever win?
Please help me mend my broken heart and let me live again

I can still feel the breeze that rustles through the trees
And misty memories of days gone by
We could never see tomorrow, no one said a word about the sorrow

And how can you mend a broken heart?
How can you stop the rain from falling down?
How can you stop the sun from shining?
What makes the world go round?
How can you mend this broken man?
How can a loser ever win?
Please help me mend my broken heart and let me live again

இதே படத்தில் வரும் இன்னொரு பாடல் "Ronan Keating" பாடிய "When U Say Notting at All"


பாடல் வரிகள் அத்தனை அழகு....அதிலும் குறிப்பாய் கடைசி பத்திக்கு முந்தின பத்தி.....பாடலின் வரிகள் கீழே!

It's amazing how you can speak right to my heart
Without saying a word, you can light up the dark
Try as I may I can never explain
What I hear when you don't say a thing

(Chorus)
The smile on your face
Lets me know that you need me
There's a truth in your eyes
Saying you'll never leave me
The touch of your hand
Says you'll catch me wherever I fall
You say it best when you say nothing at all.

All day long I can hear people talking out loud
But when you hold me near,
You drown out the crowd (drown out the crowd)
Try as they may they could never define
What's been said between your heart and mine

(Chorus Twice):
The smile on your face
Lets me know that you need me
There's a truth in your eyes
Saying you'll never leave me
The touch of your hand
Says you'll catch me wherever I fall
You say it best when you say nothing at all.

(You say it best when you say nothing at all
You say it best when you say nothing at all...)

The smile on your face,
The truth in your eyes,
The touch of your hand,
Let's me know that you need me.


படத்தின் இறுதியில் வரும் பத்திரிக்கையாளர் சந்திப்பும், அதனூடே வரும் வசனங்களும் கவிதையானவை.....தொடரும்  பாடலும்  அருமை. 

Wednesday, October 17, 2012

ஔரங்கசீப்பின் உயில்!!"மவுல்லவி ஹமீதுத்தீன்" என்பவரால் பாரசீக மொழியில் எழுதப்பட்ட சக்கரவர்த்தி அவுரங்கசீப்பின் வாழ்க்கை பற்றிய நூலின் எட்டாவது அத்தியாயத்தில், அவரது உயிலில் சொல்லப்பட்ட விஷயங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிலிருந்து...

1.நான் இந்தியாவின் சக்கரவர்த்தியாய் இருந்து இந்த நாட்டை ஆண்டேன் என்பது சத்தியமானது.ஆனால் நான் என் வாழ் நாளில் ஒரு நல்ல காரியம் கூட செய்ததில்லை என்பதற்காக மிகவும் வருத்தப்படுகிறேன்.அதற்காக இப்போது வருந்துவதால் எந்த பயனும் இல்லை.என் இறுதிச் சடங்குகளை என் அருமை மகன் ஆஸம்தான் செய்ய வேண்டும் என்பது என் விருப்பம்.வேறு யாரும் என்னுடலைத் தொடக்கூடாது.

2.என் பணியாள் ஆயா பேக்கிடம் என் பணப்பை உள்ளது.அதில் கவனமாகச் சேமித்து வைத்த 4 ரூபாயும் 2 அனாக்களும் உள்ளன.எனக்கு ஓய்வான நேரத்தில் நான் குர் ஆன் பிரதிகளை கையால் எழுதிக்கொடுத்தேன்.தொப்பிகள் தைத்தேன்.அந்த தொப்பிகளை விற்று நான் நேர்மையாக சம்பாதித்த பணம்தான் அது.அந்தப் பணத்தில்தான் கஃபன்(என் உடல் மூடும்) துணி வாங்கப்பட வேண்டும்.இந்த பாவியின் உடலை மூட வேறு எந்த பணமும் செலவிடப்பட கூடாது.இது எனது இறுதி விருப்பம்.(என் கையால் எழுதப்பட்ட)குர் ஆனின் பிரதிகளை விற்று நான் 305 ரூபாய்களைப் பெற்றேன்.அந்த பணமும் ஆயாபேக்கிடம்தான் உள்ளது.இந்தப் பணத்தில் வாங்கப்படும் இனிப்பு சோறு ஏழை முஸ்லீம்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது என் விருப்பம்.

3.என்னுடைய சாமான்களான துணிமணிகள்,மைக்கூடுகள்,எழுதுகோல்கள் மற்றும் புத்தகங்கள் அனைத்தையும் என் மகன் ஆஸ்மிடம் கொடுத்துவிட வேண்டும்.என் சவக்குழி வெட்டுவதற்கான கூலியை இளவரசர் ஆஸம் கொடுப்பார்.

4.ஓர் அடர்ந்த காட்டில் எனக்கான குழி தோண்டப்படவேண்டும்.என்னைப் புதைத்த பிறகு என்னுடைய முகத்தை திறந்து வைக்க வேண்டும்.என் முகத்தை மண்ணுக்குள் புதைத்துவிட வேண்டாம்.திறந்த முகத்தோடு நான் அல்லாஹ்வை சந்திக்க விரும்புகிறேன்.அவனுடைய உச்ச நீதிமன்றத்திற்கு திறந்த முகத்தோடு போகின்றவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

5.எனது கஃபன் துணி தடித்த கதர் துணியால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.எனது உடலிம் மீது விலையுயர்ந்த கம்பளம் எதையும் போர்த்த வேண்டாம்.எனது சவ ஊர்வலம் செல்லும் வழியில் மலர்களை தூவ வேண்டாம்.என் உடல் மீதும் மலர்களை வைக்க யாரையும் அனுமதிக்கக் கூடாது.எந்த இசையும் இசைக்கவோ பாடவோ கூடாது.நான் இசையை வெறுக்கிறேன்.

6.எனக்காக கல்லறை எதுவும் கட்டக்கூடாது.வேண்டுமானால் ஒரு மேடை அமைத்துக்கொள்ளலாம்.

7.என் ராணுவ வீரர்களுக்கும் என் தனிப்பட்ட வேலைக்காரர்களுக்கும் பல மாதங்களாக என்னால் சம்பளம் கொடுக்க முடியவில்லை.நான் இறந்த பிறகு என்னுடைய தனிப்பட்ட வேலைக்காரர்களுக்காவது அவர்களுக்கான முழு சம்பளமும் கொடுக்கப்பட வேண்டும்.ஏனெனில் கஜான காலியாக இருக்கிறது.நிஅமத் அலி எனக்கு மிகவும் நம்பிக்கையான ஊழியன்.என் உடலை அவன் தான் சுத்தப்படுத்துவான்.என் படுக்கை தூசியாக இருக்க அவன் அனுமதித்ததேயில்லை.

8.என் நினைவாக எந்த கட்டடமும் எழுப்பக்கூடாது.எனது கல்லறையில் என் பெயர் பொறிக்கப்பட்ட எந்த கல்லும் வைக்கக்கூடாது.கல்லறையில் அருகில் மரங்களை நடக்கூடாது.என்னைப் போன்ற பாவிக்கு நிழல்தரும் மரங்களின் பாதுகாப்பைப் பெறுவதற்கு தகுதியில்லை.

9.எனது மகன் ஆஸம் டெல்லியில் இருந்து ஆட்சி செய்வதற்கான அதிகாரம் பெற்றவனாகிறான்.பீஜப்புர்,கோல்கொண்டா ஆகிய மாகாணங்களை நிர்வகிக்கும் பொறுப்பு கம்பஷிடம் விடப்பட வேண்டும்.

10.அல்லாஹ் யாரையும் சக்கரவர்த்தியாக்கக் கூடாது.சக்கரவர்த்தியாக இருப்பவன் தான் உலகிலேயே துரதிர்ஷ்டம் மிக்கவன்.எந்த சமூக கூட்டங்களிலும் எனது பாவங்களை குறிப்பிடக்கூடாது.எனது வாழ்க்கையின் கதையை யாரிடமும் சொல்லக்கூடாது.

(2006ல் எழுதியது. சேகரிப்புக்காக மீள் பதிவு.)

Saturday, October 13, 2012

வடைக்கு ஆசைப்பட்டு வடைமாலை வாங்கின கதை!


போன சனிக் கிழமையன்று மனைவியானவர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு போகவேண்டுமென்றார். நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலைச் சொல்கிறார் என நினைத்தால்,  திருவள்ளூர் அருகே காக்களூர் என்ற கிராமத்திலிருக்கும் வீரஆஞ்சநேயர் கோவிலுக்கு போக வேண்டுமென்றார்.இந்தக் கோவிலைப் பற்றி நிறைய கேள்விப் பட்டதுண்டு, ஆனால் போனதில்லை. இலங்கை அரசின் முன்னாள் பிரதமரே இந்தக் கோவிலுக்கு அடிக்கடி ரகசியமாய் வந்து பூஜை புனஸ்காரங்களைச் செய்யும் பெருமையுடையவர் இந்த ஆஞ்சநேயர்.

என் மனைவியின் தாயார் புற்றுநோயுடன் கடுமையாக போராடி கொஞ்சம் கொஞ்சமாய் தோற்றுக் கொண்டிருக்கும் தருணமாகையால், சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழலாம் என்பதன் அடிப்படையில் இது மாதிரி கோவில்களுக்கு போவது மனைவியின் வாடிக்கையாகி விட்டது. வேறொரு சமயமாயிருந்தால் அவருடைய இந்த அதி தீவிர பக்தியை கேலி செய்யக் கூடிய நான் இப்போதெல்லாம் மறுபேச்சில்லாமல், அவர் சொல்லும் கோவிலுக்கெல்லாம் சிரமேற்கொண்டு அழைத்துப் போகிறேன்.

வடை கதையை பற்றி கதைப்பதற்கு முன்னால் இந்த கோவிலின் பூர்வீகம் பற்றி கொஞ்சம் பார்த்து விடுவோம்.

விஜயநகர பேரரசரான கிருஷ்ணதேவராயரின் ராஜகுரு வியாசராஜன் என்பவர் இந்தக் கோவிலை கட்டியதாக கருதப் படுகிறது. இவர் இதைப் போல 700 கோவில்களை அமைத்திருக்கிறாராம். அத்தனையும் ஆஞ்சநேயர் கோவில். இந்த எழுநூற்றிச் சில்லரை ஆஞ்சநேயர் சிலைகளும் ஒரே மாதிரியானவை என்பதுதான் சிறப்பு. அதாவது ஆஞ்சநேயரின் உயரம் எட்டிலிருந்து பத்து அடி உயரம். ஆஞ்சநேயர் கிழக்கு முகமாய் நின்றாலும், முகத்தை இடது பக்கமாய் திருப்பி அதாவது வடக்கு திசையை பார்ப்பதைப் போல அமைத்திருக்கிறார்கள். ஒரு கையில் செங்காந்தள் மலரை ஏந்தியிருக்கிறார். மற்றொரு கை அபய ஹஸ்தம். ஆஞ்சநேயரின் வால் தலைக்கு மேலே உயர்ந்து வளைந்து நிற்கிறது. வாலின் முடிவில் ஒரு மணி. அதாவது இந்த படத்தில் இருப்பதைப் போல...ஒரு கருவறை, அதன் முன்னாள் ஒரு மண்டபம் என ரொம்பவே சின்ன கோவில்தான். கோவிலின் அமைப்பை பார்த்தால் ஊரின் எல்லையில் அமைக்கப் பட்ட காவல்தெய்வத்தின் கோவிலைப் போல இருக்கிறது. ராகவேந்திரர் இங்கே வந்து தியானம் செய்ததாய் சொல்கிறார்கள். அப்புறம் வழக்கம் போல பக்த சிகாமணிகளினால் ஒன்றுக்குப் பத்தாய் ஊதிப் பெருக்கப்பட்ட ஆச்சர்ய அற்புதங்களை சுமக்கமாட்டாமல் சுமந்து கொண்டிருக்கிறார் இந்த வீர ஆஞ்சநேயர். உபயதாரர்களின் புண்ணியத்தில்தான் அந்த கோவில் நடந்து கொண்டிருக்கிறது என்பதை ஆங்காங்கே தெரியும் கொட்டை எழுத்து உபயதாரர்களின் பெயர்கள் பறைசாற்றுகிறது.

இனி வடை கதைக்கு வருவோம்....நாங்கள் போனது புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை. கோவிலை பார்த்ததும் ஏனோ பிடித்துப் போயிற்று. கிராமங்களுக்கு நடுவே ஆர்பாட்டமில்லாமல் பணத்துக்கும், பகட்டுக்கும் விலைபோகாத இம் மாதிரியான கிராமத்து கோவில்களின் மீது எனக்கு எப்போதும் தனியொரு ஈர்ப்பு உண்டு. நாங்கள் போனபோது திரையிட்டிருந்தனர். கொள்ளாத கூட்டம். பக்தர்களுக்கு இணையாய் ஈக்களும் சாமி கும்பிட வந்திருந்த அற்புதத்தை நான் இங்கே குறிப்பிட்டேயாக வேண்டும்.இப்படியான சூழலில் சட்டென திரை விலக, கோவில் மணி, அப்புறம் ஏதேதோ வாத்திய ஒலினூடே சர்வ அலங்கார பூஷனாய் தீப ஆராதனை வெளிச்சத்தில் ஆஞ்சநேயரை பார்த்த போது சட்டென மயிர் கூச்செறிந்தது உண்மை.அத்தனை ஆகிருதியான ஒரு மூலவரை நான் எதிர்பார்க்கவில்லை. மனைவியை பார்த்தேன்.அவரோ தரிசன அனுபவத்தில் நெகிழ்ந்திருந்தார். மற்றவர்களும் அப்படியே நின்றிருந்தனர்.சரம் சரமாய் துளசி, பல வண்ண மலர் மாலைகள்.....அதற்கு கொஞ்சமும் குறையாமல் வடை மாலைகள்ள்ள்ள்ள்ள். 

வடை மாலைகளை பார்த்த மாத்திரத்தில் மயிர் கூச்செறிந்ததெல்லாம் அடங்கி காலையில் சாப்பிடாமல் வந்தது நினைவுக்கு வர அந்த வடைகளில் சிலவற்றை ஆஞ்சநேயர் எனக்கு கொடுத்தால் இந்த அனுபவம் எத்தனை திவ்யமானதாயிருக்குமென மூளை கணக்குப் போட ஆரம்பித்தது.ஆரத்தி முடிந்து, துளசி தீர்த்தமெல்லாம் கொடுத்த பின்னர் ஆளுக்கு ஒன்றிரண்டு வடை கொடுப்பார்கள் என நினைத்தேன்.அங்கே நின்றிருந்தவர்களின் தலைக்கு பத்து வடையாவது கொடுக்கலாமென்கிற அளவுக்கு ஆஞ்சநேயரிடம் வடைகள் இருந்தன. 

"வடைமாலை டோக்கன் வச்சிருக்கவங்க மட்டும் நில்லுங்க, மத்தவங்க எல்லாம் சாமி பார்த்துட்டு நகருங்க" என ஒருவர் எங்கிருந்தோ கத்தினார்." அடடே!, டோக்கன் வாங்கினால்தான் வடை போலிருக்கிறதே என நினைத்து, சரி இத்தனை ஆயிற்று டோக்கனை வாங்கி வடையை ருசித்தேயாக வேண்டுமென முடிவு செய்து அலுவலகமெங்கே எனத் தேடினால், ஒரு வயதான பெண்மணி கையில் ஒரு நோட்டுடன் உட்கார்ந்திருந்தார். அவரிடம் போய் வடைமாலைக்கு டோக்கன் வேணுமென்றேன். 

அவரோ சீரியஸாய் பேர் அட்ரஸ் சொல்லுங்க என்றார். ஒரு வடைக்கு இத்தனை டேட்டாவா....என நினைத்துக் கொண்டே கர்ம சிரத்தையாய் சொன்னேன். கடைசியில் போன் நம்பர் கேட்ட போதாவது நான் சுதாரித்திருக்க வேண்டும். சொல்லி முடித்த உடன் அடுத்த சனிக் கிழமை காலைல எட்டரை மணிக்கெல்லாம் வந்திரனும். நானூற்றி ஐம்பது ரூபாய் கொடுங்க....என யந்திரத்தனமாய் சொன்னார்.

இந்த சமயத்தில் பக்கத்தில் நின்றிருந்த என் மறுபாதி என்ன நினைத்தாரோ தெரியவில்லை, விடுவிடுவென நடந்து தூரமாய் போய்விட்டார். எனக்கிருந்த பசி மயக்கத்தில் ஒன்றும் புரியாமல் பணத்தை எண்ணிக் கொடுத்து விட்டு வந்தால், மனைவி விழுந்து விழுந்து சிரிக்கிறார். எதுக்கு இத்தனை சந்தொஷமென கேட்க, அந்தம்மா நானூற்றி ஐம்பது கொடுங்க...ன்னு சொன்னவுடன் என் முகம் போன போக்கைப் பார்த்துத்தான் சிரிப்பை அடக்க முடியவில்லையாம். 

விதி வலியது!

இனி இந்த வாரம்....

இன்று காலையில் எழுந்த உடனே, வடைமாலை வாங்கப் போகனும்ல சீக்கிரமா கிளம்புங்க என மனைவி விரட்ட, எல்லோருமா போவோம் என கூட்டம் சேர்த்தேன். ஆனால் யாரும் வரமாட்டேனெனச் சொல்லிவிட்டார்கள். மகனுக்கு ஸ்கூலில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம், அதனால் மனைவியும், மகனும் அங்கே போவதாய் திட்டம். மிஞ்சியது மகள்தான்.அப்பா தனியா போறார்ல என்கிற மனைவியின் கரிசனத்தினால் மகளும் நானும் காலையில் எட்டு மணிக்கெல்லாம் கிளம்பினோம். ஆஞ்சநேயரை பார்ப்பதை விடவும் வடைமாலைதான் என் அஜென்டாவாக இருந்தது. எத்தனை வடை தருவாய்ங்க என மனதுக்குள் கணக்குப் போட்டுக் கொண்டே போனேன்.

நாங்கள் போன சமயத்தில்தான் ஆஞ்சநேயருக்கு எண்ணை தேய்த்துக் கொண்டிருந்தனர். சாவகாசமாய் ஒரு மணி நேரத்துக்கு குறையாமல் தேய்த்த்த்த்த்த்த்துக் கொண்டேயிருந்தார்கள். அடுத்து அபிஷேகம், அடுத்து திரை, உள்ளே அலங்காரம், திரை விலக்கி தரிசனம், ஆரத்தி உடனே வடைமாலைதானென அடுத்தடுத்த நிகழ்வுகளை பட்டியலிட்டு, மளமளவென நேரக் கணக்குப் போட்டு எப்படியும் பதினோரு மணிக்கெல்லாம் கிளம்பிடலாமென நினைத்துக் கொண்டேன்.

ஆனால் கிளம்பும் போது மணி ஒன்றை தொட்டிருந்தது. ஆம்!, அத்தனை நிதானமாய் பூஜைகள் நடந்தன. வடைக்கு ஆசைப் பட்டு அது வடைமாலையாகி, அதன் பொருட்டு  நான்கு மணி நேரம் அவர் சன்னிதியில் உட்கார்ந்திருக்கும் படி செய்த வீர ஆஞ்சநேயரின் மகிமையை என்னவென்பது. 

விதி வலியதுதான்!!* பதிவில் இருக்கும் இரண்டு படங்களும் இணையத்திலிருந்து சுட்டது. என்னுடையதில்லை.

சர்ச்சைகளும், சபரிமலை ஐயப்பனும்!


சபரிமலையில் 'ப்ரசன்னம்'....ஐயப்பன் கோவம்....நடிகையின் பேட்டி....அதிர்ச்சி அலைகள், இப்படி நாலைந்து வார்த்தைகளிள் பிரச்சினை உங்களுக்கு புரிந்திருக்கும்.சைவ மற்றும் வைணவ குழுக்களின் ஒற்றுமை(?)யின் அடையாளமாய் குறிக்கப்படுவதும், மெக்காவின் புனித ஹஜ் க்கு பிறகு அதிக எண்ணிக்கையில்(ஆண்டிற்கு) பக்தர்கள் வருகைதரும் திருத்தலமான சபரிமலைக்கும், சாஸ்தாவுக்கும் சர்ச்சைகள் புதிதல்ல.

சபரிமலை பற்றி முன்னமே எழுத நினைத்திருந்த எனக்கு இதுதான் சமயமென தொடர்கிறேன்......மணிகண்டன் என்கிற பந்தள ராஜகுமாரன், மகிஷி என்கிற அரக்கியை அழித்து, புலிப்பால் கொணர்ந்து தனது 12ம் வயதில் தன்னை யாரென உணர்த்தி சபரிமலையில் கோவில் கொண்டதாய் புராணம் கூறும் வரலாறு ஒருபுறமிருக்க, இதைத் தாண்டிய 'மரபு வரலாறு'ஒன்று இருப்பது அநேகருக்குத் தெரியாது அல்லது மறைக்கப் பட்டுவிட்டது.

இதைத் தவிர சபரிமலையானது ஒரு பௌத்த மடாலயமாக அல்லது புத்த மதத்தோடு சார்புடையது என நிறுவும் வகையில் திரு.ராஜீவ் சீனிவாசன் என்பவரது ஆய்வுக் கட்டுரையின் பகுதிகளையும் பாருங்கள்....
There is considerable evidence that Lord Ayyappan was once a Buddhist deity, and that Sabarimala was once a Buddhist temple complex. However, it appears that prior to its Buddhist incarnation, the temple was an early Dravidian Saivite centre; therefore it has been a sacred spot of singular merit of at least three or four millennia. Its famed Makara Jyotis (Divine Light) which appears mysteriously in the forest on Makara Sankranti day gave it the name Potalaka.

Astonishingly, it appears that the Dalai Lama's Palace in Lhasa, the incomparable Potala, is named after Sabarimala! The Bodhisattva (Buddha-to-be) Avalokitesvara Padmapani, the Bodhisattva of Compassion, who is, by tradition, reincarnated as the Dalai Lama, was also the one worshipped at Sabarimala.

I am indebted to my cerebral friend Devakumar Sreevijayan (formerly of Austin, Texas and currently of New York City) for almost all of this fascinating research. It is in three texts: the Avatamsaka Sutra, the Hymn to the Thousand-Armed Avalokitesvara, and the writings of the intrepid Chinese traveller Hsiuen Tsang (Zuen Xang?), that we find the detailed references. Dev found a good deal of information in the book, The Thousand-Armed Avalokitesvara by Lokesh Chandra.

But there is ample circumstantial evidence for Kerala's Buddhist/Jain past. Unlike Nagarjunakonda in Andhra Pradesh and Sravanabelagola in Karnataka, they have left no large monuments in Kerala, but it is known that Kodungallur, for example, was a Buddhist centre. Kodungallur, at the time known as Muziris, was a major port; a Buddhist nunnery there became a great Devi temple later, associated with Kannagi, the heroine of the Tamil epic Silappathikaram (The Jewelled Anklet) written by the Chera Prince Ilango Adigal, who lived in what is now Kerala.

The revered Patriarch Bodhidharma (Daruma in Japanese) from Kodungallur was the originator of the Zen sect (dhyana in Sanskrit, Ch'an in Chinese) -- he went to the Shao-Lin monastery in China (420-479 CE), and he took the martial art of kalari payat there for the protection of the unarmed monks, whence the various martial arts of East Asia. According to Chinese legend, Bodhidharma also created the tea plant, by tearing off his eyelids and planting them in the ground: presumably this means he also took the tea plant with him.

The legend of Mahabali -- the asura king sent to the underworld by an avatar of Lord Vishnu -- also gives clues to the Hindu-Buddhist past: an egalitarian Buddhist rule overthrown by Brahmin-led Upanishadic Hindus. Perhaps there was a period of co-existence, much like the centuries-old peaceful co-existence between the followers of the Buddha and Eswara/Siva in South East Asia. In the great temples of Java and Cambodia, Eswara/Buddha are almost seen as interchangeable.

At Prambanan in Java (the Hindu counterpart to the great Buddhist complex at Borobudur) and at Angkor Wat in Cambodia, the images of Siva/Eswara and of the Buddha are sometimes intermixed; apparently there was no great animosity between the worshippers of both. Similarly, one might hope, the transitions from Siva to the Buddha to Ayyappan were relatively peaceful.

The circumstantial evidence for the Buddhist nature of Lord Ayyappan is compelling. For one, the devotees chant: "Swamiye saranam Ayyappa," so close to the Buddhist mantra: "Buddham saranam gacchami, Sangham saranam gacchami, Dhammam saranam gacchami."

Furthermore, the very sitting posture of the Ayyappan deity is suggestive: almost every Buddhist image anywhere, including those sometimes unearthed in the fields of Travancore by farmers, is in sitting position. Whereas practically no other deity in Kerala is in that posture.

Says Lokesh Chandra: 'The Avatamsaka Sutra describes the earthly paradise of Avalokitesvara: ''Potalaka is on the sea-side in the south, it has woods, it has streams, and tanks''...Buddhabhadra's (AD 420) rendering of Potala (or Potalaka) is ''Brilliance." It refers to its etymology: Tamil pottu (potti-) ''to light (as a fire)''...brilliance refers to the makara-jyoti of Sabarimala.'

'Hsuen Tsang refers to Avalokitesvara on the Potala in the following words, summarised by Waters (1905): ''In the south of the country near the sea was the Mo-lo-ya (Malaya) mountain, with its lofty cliffs and ridges and deep valleys and gullies, on which were sandal, camphor and other trees. To the east of this was Pu-ta-lo-ka (Potalaka) mountain with steep narrow paths over its cliffs and gorges in irregular confusion...'' '

All of this is still true; Hsuen Tsang's description could easily be of contemporary Sabarimala. The only difference perhaps is that the forests are no longer so dense. Pilgrims believe that those who ignore the strict penances -- abstinence from alcohol, smoking, meat-eating and sex -- are in danger of being attacked by wild animals while on their trek. However, there are not too many large animals in these forests any more, as a result of human encroachment.

Lokesh Chandra continues: 'Hsuen Tsang clearly says that Avalokitesvara at Potala sometimes takes the form of Isvara (Siva) and sometimes that of a Pasupata yogin. In fact, it was Siva who was metamorphosed into Avalokitesvara...The image at Potalaka which was originally Siva, was deemed to be Avalokitesvara when Buddhism became dominant... The Potalaka Lokesvara and the Thousand-armed Avalokitesvara have echoes of Siva and Vishnu, of Hari and Hara.'

'...Lord Ayyappa of Sabarimala... could have been the Potala Lokesvara of Buddhist literature. The makara jyoti of Sabarimala recalls Potala's "brilliance"... The long, arduous and hazardous trek through areas known to be inhabited by elephants and other wildlife to Sabarimala is spoken of in the pilgrimage to Potala Lokesvara. The Buddhist character of Ayyappa is explicit in his merger with Dharma-sasta. Sasta is a synonym of Lord Buddha.'

Thus, the history of Sabarimala is to some extent a microcosm of the religious history of India. It is interesting that there are connections between Kerala, in the deep South, and Ladakh/Zanskar in the far North, where the last of the Tibetan Buddhists practise their religion unmolested.

Those devout Ayyappan pilgrims in their dark clothes symbolising the abandonment of their egos, who flock to the hill temple in the cool winter months, are thus, in a way, celebrating two of the great religious streams of Mother India: both the Hindu present and the Buddhist past.

இந்த சர்ச்சைகள் நீண்ட விவாதத்திற்குட்பட்டவை என்றாலும் சமீபத்திய சர்ச்சை பற்றிய என்னுடைய கேள்விகள்......
எல்லாருக்கும் பொதுவான இறைவன் என்று வந்துவிட்ட பிறகு அவரை யார் தொட்டால் என்ன......எத்தனையோ விடயங்கள் மளமளவென மாறிவரும் போது, கடவுளும் அவரைச் சூழ்ந்தவர்களும் இன்னமும் பழமையிலேயே உழல வேண்டிய அவசியம் என்ன?

சபரிமலைக்கு சென்றுவந்த பக்தர்களுக்குத் தெரியும் மூலவர் 'சாஸ்தா' வின் அருகில் சென்று அவரை தொட்டு வணங்குவதென்பது சாத்தியமே இல்லையென்று, அப்படியிருக்க இதை நன்கு அறிந்த தேவஸ்தானமும், ஊடகங்களும் இந்தச் செய்தியை வைத்துக் கொண்டு விளையாட வேண்டிய அவசியமென்ன?

கோவிலின் புனிதத்துவம் கொட்டும் வருமானத்திற்காக விலை பேசப்படுகிறதா?

இன்னும் எத்தனை காலத்திற்கு 'மகரஜோதி' மர்மத்தை வைத்துக் கொண்டு அப்பாவி பக்தனின் நம்பிக்கையோடு விளையாடப் போகிறார்கள்?

இந்தப் பிரச்சினையின் சமீபத்திய ஹைலைட்டான ஜோக், இன்றைக்கு இன்னொரு நடிகை(சுதா சந்திரன்) பதினெட்டாம் படியில் நடனம் ஆடினேன் என்றிருக்கிறார், இதெல்லாம் சுத்த பேத்தல், விளம்பரத்திற்காகச் செய்யப்படும் மலிவான பிதற்றல். பதினெட்டாம் படி என்பது மேடை போலிருக்கும் என்று இந்த அம்மையாருக்கு யாரோ சொல்லியிருப்பார்கள் போலிருக்கிறது.
இந்த சர்ச்சைகள் பல லட்சக்கணக்கான அய்யப்ப பக்தர்களின் மனதை காயப்படுத்தியிருப்பது வருத்தமான செய்தி.

(2006ல் எழுதியது. சபரிமலையில் மூலவரை தொட்டு வணங்கியதாய் ஒரு நடிகை பரபரப்பை ஏற்படுத்திய சமயத்தில் அதீதமான எரிச்சலின் வெளிப்பாடாய் எழுதிய பதிவு. பழைய கட்டுரைகளை ஒரிடத்தில் சேகரிக்கும் பொருட்டு  மீள்பதிவு)

Thursday, October 11, 2012

நான்!, ராமர் பிள்ளை!!, மூலிகை பெட்ரோல்!!! - 6


இந்த தொடரில் இடம்பெறும் நிகழ்வுகள் அனைத்தும் 2000-01 ஆண்டுகளில் என்னுடைய நேரிடை அனுபவம். இதன் மூலம் எந்த தனி மனிதரைப் பற்றியோ அல்லது  குறிப்பிட்ட இயக்கத்தைப் பற்றியோ ஒரு சார்பான முடிவுக்கு வந்துவிடவேண்டாம். இது என்னுடைய தனிப் பட்ட அனுபவங்களும் அதனால் ஏற்பட்ட கருத்துக்கள் மாத்திரமே....

இந்த தொடரின் நிறைவாக, மூலிகைபெட்ரோலின் சாத்தியம் மற்றும் அதைச் சூழ்ந்திருக்கும் சந்தர்ப்ப சூழல்கள் அதை நிர்ணயிக்கும் காரண காரணிகளைப் பற்றிய எனது கணிப்புகளுடன் நிறைவு செய்யவிரும்புகிறேன்.

முதலில் தனித்துவமான மூலிகைபெட்ரோல் என்பது சாத்தியமற்றது என்றே கருதுகிறேன், பசுந்தாவரங்களுடன் செயற்கையாக தயாரிக்கப்பட்ட வேதிப் பொருட்களின் துனைகொண்டு எரிபொருளை உருவாக்குதல் வேண்டுமானால் சாத்தியமாகலாம், ஆனால் அதுவும் செலவுகூடிய தயாரிப்பாகவே இருக்கும்.உதாரணத்திற்கு ராமரின் கூற்றுப்படி நீரில் இருக்கும் ஹைட்ரஜனைப் பிரிக்க மூலிகை உபயோகிக்கப்படுகிறது என்பதை நிறுவ எந்த ஆதாரங்களும் நம்மிடையே இல்லை.

நானறிந்தவரை ஹைட்ரஜனை நீரிலிருந்து பிரித்தெடுக்கும் முறைகள் செலவு கூடியது.வெறும் இலைகளைப் போட்டு ஒருவர் தண்ணீரிலிருந்து ஹைட்ரஜனைப் பிரிக்கிறாரென்றால், ஹைட்ரஜனை நேரடியாகவே எரிபொருளாய் உபயோகித்திருக்கலாம்.அதன் மூலம் பெரும் புரட்சியையே உருவாக்க வாய்ப்புகள் இருந்தபோது அவரைச் சேர்ந்த அறிவியலாலர்களுக்கு இதை யோசிக்காமல் இருந்திருப்பார்களா?

சர்கரை ஆலைக் கழிவுகளில் இருந்து விலை குறைவான 'எத்தனால்' என்கிற துனைப்பொருள் தயாரிக்கபடுகிறது. பிரேசில் போன்ற நாடுகளில் இந்த எத்தனால் பெட்ரோலுடன் 40% வரை கலந்து வினியோகிக்கப்படுகிறது. கடந்த பா.ஜ.க அரசினால் இத்திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டாலும் இன்றளவில் சோதனையில்தான் இருக்கிறது. அவற்றை பயன்படுத்துவதால் வாகனங்களுக்கு ஏதேனும் குறை வரலாம் என அரசு தயங்குவதாகத் தெரிகிறது. என்னுடைய சந்தேகமெல்லாம் நமது ராமரின் தயாரிப்பும் சற்றேறக்குறைய இந்த எத்தனாலை ஒத்ததாக இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் இதை நிறுவ என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை.

இது ஒருபுறமிருக்க இந்தக் கண்டுபிடிப்புக்க காப்புரிமை பெறுவதற்கான முயற்சிகள் ஆரம்பத்திலிருந்தே குழப்பம் நிறைந்ததாயும், நேர்மையான தொனியிலும் இல்லை என்பது என்னுடைய கருத்து. இங்கே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பொருளுக்கு சீனாவிலும், ஜெர்மனியிலும் காப்புரிமைக்கு பதிய வேண்டிய அவசியமென்ன?...., தமிழகத்தைச் சேர்ந்த சில அரசியல் தலைவர்களுக்கு பயந்துதான் இத்தகைய நடவடிக்கைகள் என RSS இயக்கமோ ராமரோ சொல்ல முனைவார்களானால் அதைவிட பெரிய கேலிக்கூத்து வேறெதுவும் இருக்க முடியாது.

அந்த காலகட்டத்தில் இதை வைத்து பணம் பண்ண அவர்கள் காட்டிய அவசரம் அதற்குப் பின் என்ன ஆனது? அவர்கள் சொன்னதை நம்பி முதலீடு செய்த நபர்கள் இன்றைக்கு என்ன ஆனார்கள்?.அவர்கள் முதலீடு செய்த பெரும்பணம் திரும்பகொடுக்கப்பட்டதா? அல்லது இன்றளவும் ரகசியமாய் எரிபொருள் தயாரித்து விற்றுக் கொண்டிருக்கின்றனரா?.அந்த காலகட்டத்திற்கு பின்னர் ராமர் எந்தவொரு ஊடக வெளிச்சத்திலும் வரவில்லையே...

என்ன ஆனார் ராமர்?.

இப்படி எண்ணற்ற கேள்விகள சங்கிலித்தொடராய் வந்தாலும், ராமர் என்கிற அந்த பாமரனின் கனவுகளும், எதிர்பார்ப்புகளும் அவன் கண் முன்னே நொறுங்கிப் போனதா அல்லது நொறுக்கப்பட்டதா தெரியவில்லை. ஏனெனில் பல சமயங்களில் அவரின் புதிய எஜமானர்கள் முன் பேசத்திராணியற்று பேந்த பேந்த முழித்த கையாலாகாத ராமரை நான் பார்த்திருக்கிறேன்.சக மனிதனாய், தனிப்பட்ட முறையில் அவருக்காக ரொம்பவே வருந்துகிறேன்.அவர் ஒரு ஏமாற்றுக்காராய் இருப்பார் என்பதை இதுவரை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சமயங்களில் அறிவைத் தாண்டி உணர்வுகள் சொலவதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

(2006ல் எழுதிய தொடர், சேகரிப்புக்காக மீள் பதிவு )

நான்!, ராமர் பிள்ளை!!, மூலிகை பெட்ரோல்!!! - 5


இந்த தொடரில் இடம்பெறும் நிகழ்வுகள் அனைத்தும் 2000-01 ஆண்டுகளில் என்னுடைய நேரிடை அனுபவம். இதன் மூலம் எந்த தனி மனிதரைப் பற்றியோ அல்லது  குறிப்பிட்ட இயக்கத்தைப் பற்றியோ ஒரு சார்பான முடிவுக்கு வந்துவிடவேண்டாம். இது என்னுடைய தனிப் பட்ட அனுபவங்களும் அதனால் ஏற்பட்ட கருத்துக்கள் மாத்திரமே....

"எனக்கு ராமநாதபுர மாவட்டம் கொடுங்க..ஆனா ஒரு சொட்டு கூட அங்க விக்கறதா இல்லை...அவ்வளவும் எக்ஸ்போர்ட்தான்" என்றேன். 

"எங்க எக்ஸ்போர்ட் பண்ண போறீங்க?"...ன்னு கேட்டார்.

இலங்கைக்குத்தான் என்றேன். அத்தனையும் ட்ரம்ல போட்டு கடல்ல மிதக்கவிட்டு கொண்டுபோய் வித்தா நல்ல காசு பார்க்கலாம்னு சொன்னதும் ஆடிப்போய்விட்டார். என்னங்க இப்படி வில்லங்கமா பேசறீங்க, என நிஜமான கவலையோடு சொன்னார்.சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க ராமர், ஒரு பொருள் புதுசா சந்தைக்கு வருதுன்னா அதற்கென தனித்துவமான திட்டமிடலும், விற்பனை உத்தியும் இருக்கனும்.

எனக்குத் தெரிஞ்சி இந்த விற்பனைக்கு எந்த அரசுத் துறையிடமும் அனுமதியோ அங்கீகாரமோ நீங்கள் பெறவில்லை. அவசர கோலத்துல செய்யுற எதுவும் சரியாவராது. அதுனால என்னால இதுல உங்களோட எவ்வளவு தூரம் பங்கெடுத்துக்க முடியும்னு தெரியலைன்னு சொன்னேன். சரி நாம் நேர பேசிக்கலாம்னு சமாதனப்படுத்தினார்.ஒரு வாரம் கழித்து ராமர் புதிய எரிபொருள் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழுடன் சந்தித்தார்.

கோடம்பாக்கம் பைலட் திரையரங்கினையொட்டிய வீதியில் ஒரு ஹோட்டலில் விழா.எல்லா மாவட்ட முகவர்களும் வருகிறார்கள் அவசியம் வரவேண்டுமென கேட்டார். ஆர்வம் இல்லாவிடினும் ராமருக்காக விழாவிற்கு சென்றேன். பா.ஜ.க வைச் சேர்ந்தவர்களும் RSS பிரமுகர்களும் குழுமியிருந்தனர்.கட்சிக்காரர்களே நான் அந்த மாவட்டம் அவர் இந்த மாவட்டம் என பேசிக்கொண்டிருந்தனர்.பத்திரிக்கை நிருபர்கள் என அய்ந்தாறு பேர் உட்கார வைக்கப்பட்டிருந்தனர்.

முதலில் ராமர்பிள்ளையின் தாயார் குத்துவிளக்கேற்றிய அந்தக் கணத்தில் அவரின் மொத்தக் குடும்பமே நெகிழ்ந்து கண்ணீர் சிந்தியது உணர்ச்சிப்பூர்வமாய் இருந்தது. அந்த ஏழைத் தாய் எத்தனை எதிர்பார்ப்புகளையும், ஏமாற்றங்களையும், ஏளனங்களையும் சந்தித்திருப்பார் என்பதை உணரமுடிந்தது.சம்பிரதாயத்திற்கு சில பெரியவர்கள் பேசிய பின்னர் வழக்கறிஞர் சம்பத் குமார் பேசினார்.ராமர் மீது CBI போட்ட வழக்குகளை நீதிமன்றத்தில் எவ்வாறு முறியடிக்கப் பட்டது என்பதை விளக்கினார்.

மூலிகை எரிபொருளை வாகனங்களில் பயன்படுத்துவது தொடர்பான சிக்கலை விளக்கி அதை சரிசெய்யும் வரை மண்ணென்னைக்கு மாற்றாக ஏழைமக்களை இலக்காக வைத்து புதிய எரிபொருளை சந்தைபடுத்த இருப்பதையும் அந்த எரிபொருளுக்கு "ஜெரோசின்"(ஜெய் ஸ்றீ ராம்+கெரோசின்) என பெயரிட்டிருப்பதாக அறிவிக்க கரகோஷம் எழுந்தது. மயிலை சட்டமன்ற உறுப்பினராக இருந்த திரு.லட்சுமணன் முறைப்படி ஜெரோசினை அறிமுகப்படுத்தினார். 

தொடர்ந்து நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், ஹிந்துவில் இருந்து வந்த நிருபர் மட்டுமே நியாயமான சந்தேகங்களை எழுப்பி சம்பத்குமாரை எரிச்சலூட்டினார்.முடிவில் எல்லா பத்திரிக்கையாளர்களும் கவர் ஒன்றைக் கொடுத்தார்கள்...அதில் என்ன இருந்திருக்குமென்பதை உங்கள் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்.அடுத்த நாள் பத்திரிக்கைக்ளில் இந்த நிகழ்வு குட்டியான பெட்டிச் செய்தியாகத்தான் வந்திருந்தது வேறுவிடயம்.

"ஜீ" என்னிடம் அன்பாய் நலம் விசாரித்தார், வாரவாரம் அவர்கள் அலுவலகத்தில் நடக்கும் கூட்டங்களுக்கு நான் வந்தால் மகிழ்ச்சியடைவேன் என கூறினார்.இன்றைக்கு வரை அவருக்கு அந்த வாய்ப்பை நான் வழங்கவில்லை.

மறுநாள் ராமர் என்னை சந்தித்து, ராமநாதபுரம் அல்லது சென்னையை தருவதாகவும், ஐம்பது லட்ச ரூபாய் இரண்டு தவனைகளாக தரவேண்டுமெனக் கூறினார். அதாவது 25 லட்ச ரூபாய் ராமர் தொழில்நுட்பம் தருவதற்கான விலையாகவும், அது திரும்ப தரப்படாது என்றும், மற்ற 25 லட்சம் மாவட்ட முகவர் தொகையாக இருக்கும் என கூறினார். இது போக மொத்த விற்பனையில் ராமருக்கு ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் ராயல்டியாக தர வேண்டுமென கூறினார்.அடுத்து வரும் ஆண்டுகளில் ஆண்டுக்கு 25 லட்சம் கொடுத்தால் போதுமென்றார்.

பணம் கொடுப்பது சிரமமில்லையென்றாலும், எவ்வித அரசு அங்கீகாரமுமில்லாமல் RSS என்கிற பின்புல செல்வாக்கை மட்டுமே நம்பி ரிஸ்க் எடுப்பதில் எனக்கு விருப்பமில்லை.ஆனால் ராமரோ 'அவுக கேட்ருக்காக...இவுக கேட்ருக்காக'....என நெருக்கடி கொடுத்தார்.விருப்பமில்லை எனக் கூறி அவரை வருத்தப்பட வைக்க எனக்கு விருப்பமில்லாததால்....பணம் பிரச்சினை இல்லை ஆனால் எனக்கு மதுரைதான் வேண்டுமென்றேன்.நிச்சயமாய் அவர் மதுரையை தரப்போவதில்லை என எனக்குத் தெரியும்.

விருதுநகர் வரை வந்தார், என்னை அவரது நெட்வொர்க்கில் வைத்துக்கொள்ள வேண்டுமென ரொம்பவே ஆசைப்பட்டார். இந்தச் சமயத்தில் முதல் முகவர் தன் விற்பனையை துவக்கும் விழா வந்தது. திருவள்ளூர் மாவட்ட முகவர் மூலிகை பெட்ரோல் தயாரிப்பு மற்றும்  விற்பனை துவக்கும் விழா பாடி TVS லூகாஸ் சந்திப்பிற்கு அருகே நடந்தது. தற்போதைய தமிழக பா.ஜ.க தலைவர் திரு.இல.கணேசன் தயாரிப்பினையும் விற்பனையையும் துவக்கி வைத்தார்.இங்கேயும் பத்திரிக்கையாளர்கள்...கவர் எல்லாம் அமர்க்களப்பட்டது.அந்த முகவரிடம் எக்ஸ்ப்ளோசிவ் லைசென்ஸ் எல்லாம் வாங்கிவிட்டீர்களா எனக்கேட்டேன். அவர் என்னை வேற்றுகிரக ஆசாமியை பார்ப்பதைப் போல பார்த்தார்.

இனி ராமருக்காக நேரத்தை வீணடிபப்தில் அர்த்தமில்லை என்கிற முடிவுடன்,ராமரை வாழ்த்திவிட்டு விழாவில் இருந்து கிளம்பினேன்.அதுதான் அவரை கடைசியாக சந்தித்தது.சில நாட்கள் கழித்து பாடியில் ஒரு கடை ராமரின் மூலிகை பெட்ரோல் விற்பனையகம் என அமர்களத்துடன் திறக்கப்பட்டது. அன்று மாலை அந்தவழியாய் போகும் போது "NO STOCK" என தட்டி வைத்திருந்தனர். அடுத்த நாளும் அதே தட்டி, இரண்டொரு நாள் கழித்து தட்டிக்கு பதில் மூடிய ஷட்டரில் எழுதி வைத்திருந்தனர். இதை எழுதும் இன்று வரை அந்தக் கடை திறக்கப்படதாக தெரியவில்லை. தயாரிப்பு நிறுவனம் அமைப்பதாக விழா நடந்த இடத்தில் இன்று ஒரு பெட்ரோல் பங்க் வந்துவிட்டது. 

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் இரண்டொரு முறை அவர் தொலைபேசினாலும் நான் விலகிப்போகிறேன் என்பதை உணர்த்தினேன். அவரும் புரிந்துகொண்டார், நாளடைவில் எங்களுக்கிடையேயான தொலைத்தொடர்பும் நின்று போனது, எனது தொலைபேசியில் இருந்த அவரது எண்ணும் நீக்கப்பட்டது.

இந்த மொத்த அனுபவம் பற்றிய எனது நிறைவினை அடுத்த பதிவுடன் முடிக்கிறேன்.

தொடரும்

(2006ல் எழுதிய தொடர், சேகரிப்புக்காக மீள் பதிவு )

நான்!, ராமர் பிள்ளை!!, மூலிகை பெட்ரோல்!!! - 4


இந்த தொடரில் இடம்பெறும் நிகழ்வுகள் அனைத்தும் 2000-01 ஆண்டுகளில் என்னுடைய நேரிடை அனுபவம். இதன் மூலம் எந்த தனி மனிதரைப் பற்றியோ அல்லது  குறிப்பிட்ட இயக்கத்தைப் பற்றியோ ஒரு சார்பான முடிவுக்கு வந்துவிடவேண்டாம். இது என்னுடைய தனிப் பட்ட அனுபவங்களும் அதனால் ஏற்பட்ட கருத்துக்கள் மாத்திரமே....

அங்கே நிறைய புத்தகங்கள் வாங்கினேன்....படித்தேனா என்று யாரும் கேட்டுவிடாதீர்கள்.வெளியே வந்ததும் ராமர் ஆவலாய் ஓடி வந்தார்,எனக்கு அவரைப் பார்த்து கவலைதான் வந்தது. உள்ளே நடந்ததைக் கேட்டார்...விவரம் சொன்னேன். "ஜீ" அவருக்கு கடவுளைப் போல தெரிந்தார். எனக்கோ ஹி..ஹி..வேணாம் யாரும் கருத்து கேக்காதீங்கப்பா.....இனி இவர்களை சந்தித்துப் பேசுவதில் அர்த்தமில்லை, என நினைத்து ராமரிடம் தனியாக பேசிப் பார்த்துவிடலாம் என நினைத்தேன்.ஆனால் மனிதர் அசுர விசுவாசத்தோடு இருந்தார், பாவம் அவருக்கு கிடைத்த கடைசிகொம்பு அவர்கள்....

இதற்கிடையே விஜய்அமிர்தராஜ் குழுமம் மொத்தமாக உலக உரிமையை(!) 250 கோடிக்கு பேசிக்கொண்டிருப்பதாக கூறினர்.இது எனக்கு விரிக்கப்பட்ட வலையா எனத் தெரியாது, ஆனால் நான் வேறு முயற்சிகளில் இறங்கியிருந்தேன். மதுரை காமராசர் பல்கலை கழகத்தில் வேதியியல்துறையில் எனது உறவினர் பேராசிரியராக இருந்தார். அவரை சந்தித்து இதை உருவாக்கக் கூடிய சாத்தியகூறுகள் பற்றி விவாதித்தேன்.அவரோ ராமரிடம் இருந்து சில அடிப்படை தகவல்களை பெற வாய்ப்பிருந்தால் மேலே யோசிக்கலாம் என கைவிரித்தார்.

ராமர் நேரிடையாக தகவல்களைத் தர வாய்ப்பில்லாததால் பேச்சுவாக்கில் அடிப்படை தகவல்களை பெறலாம் என நினைத்தேன். இது தவறுதான் என்றாலும் ஒரு வியாபாரியாக எனக்கான சாதக வாய்ப்புகளை உறுவாக்குவதில் தவறில்லையென்றே நினைத்தேன்.அடிப்படை தகவல்களைக் கொண்டு அந்த பொருளை புதிதாக உருவாக்க முனைவதின் சாத்தியங்களை நோக்கினேன்.அடிப்படையில் சில தகவல்களை பெறமுடிந்தாலும் அவற்றை சோதித்துப் பார்க்கவோ அல்லது அதற்கு சமமான ஒரு எரிபொருளை தயாரிக்கும் ஆர்வம் இதுவரை எனக்கு ஏற்படவில்லை. ஒருவேளை என் மனசாட்சி வாழ்வின் சாதாரண நிலையிலிருக்கும் ஒரு சாமானியனின் உடமையை அபகரிக்க உடன்படவில்லையோ என்னவோ!

அவரிடம் பேச்சுவாக்கில் நான் பெற்ற தகவல்கள்...இவை யாருக்காவது பயன்படுமா அல்லது சாத்தியங்கள் உண்டா என வேதியியல் அறிவு உள்ளவர்கள்தான் கூற வேண்டும்.

1.அவர் உபயோகிக்கும் இலைக்கும் எரிபொருளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

2.நீரில் இருந்து ஹைட்ரஜனை பிரிக்கும் வேலையை மட்டும்தான் இலைகள் செய்கின்றன

3.சிட்ரிக் குடும்ப உப்பிலிருக்கும் கார்பன் அணுக்களும் ஹைட்ரஜனுக்குமான வேதி வினையில் எரியும் தன்மையிலான ஹைட்ரோகார்பன்கள் உறுவாக்கப்படுகிறது.

4.அவர் பயன்படுத்தும் இலை பூவரசமர இலையென ஒரு முறையும், இன்னொரு முறை அவை பருத்தி இலைகள் என்றும் கூறினார்.


இதன் பிறகு பலமுறை அவர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் நான் ஆர்வம் காட்டவில்லை. ராமர் என்னை அவருடைய நெருங்கிய நட்பு வைத்துக்கொள்வதில் ரொம்பவே மெனக்கெட்டார்.எனது நிறுவனங்களில் உள்ள வாகனங்களுக்கும், ஜெனரேட்டர்களுக்கும் மூலிகை எரிபொருள் தருவதாகக் கூறினார்.இதனிடையே ராமரின் வழக்கறிஞர் திரு.சம்பத்குமார் அவர்களை இரண்டொரு முறை சந்தித்தேன்.நான் சந்தித்த மனிதர்களிலே இவர் ரொம்ப நேர்மையானவர் என நினைக்கிறேன்.பல உண்மைகளை ஒப்புக்கொண்டார். இந்திய எண்ணைக் கழக சோதனையில் 11 விதமான தகுதிச் சோதனையில் 9ல் மட்டுமே திருப்திகரமான முடிவுகள் வந்ததாயும், மற்ற இரு சோதனையில் தோல்வி எனவே நிறைய ஆராய்ச்சிகள் செய்ய வேண்டியிருப்பதாகக் கூறினார். வாகனங்களில் உபயோகித்தால் பிசின் போன்ற ஒரு பொருள் உருவாவதாகவும் அவை வாகனங்களுக்கு உகந்ததல்ல என்றும் கூறினார்.

எனவே மண்ணென்னைக்கு மாற்றாக இதை சந்தைப்படுத்த வாய்ப்பிருப்பதாக கூறினார்.நானும் அது சாத்தியமென்றே நினைத்தேன்.மாவட்ட வாரியாக முகவர்களை நியமித்து சந்தைப் படுத்தலாம் எனக் கூறினேன்.அவரும் இதை பரிசீலிப்பதாகக் கூறினார். ஒரு நாள் ராமர் அழைத்து என்னுடைய பரிந்துரையை அவர்களின் புதிய திட்டமென கூறி, என்னை ஒரு மாவட்டத்திற்கான முகவராகும்படி கேட்டார்.எனக்கு மதுரை மாவட்டம் வேண்டுமென்றேன். அவர் அதை தன் சகோதரிக்கு தரவிருப்பதால் இயலாதென்றார். சரி ராமநாதபுரம் மாவட்டம் கொடுங்கள் எனக் கேட்டேன்.ராமர் நான் கோவிப்பதாக நினைத்து அதைவிட நல்ல மாவட்டங்கள் எத்தனையோ இருக்கிறதே எனக் கேட்டார், நான் சொன்ன காரணத்தைக் கேட்டு அவர் ஆடிப்போய்விட்டார்

அது.....

தொடரும்

(2006ல் எழுதிய தொடர், சேகரிப்புக்காக மீள் பதிவு )

நான்!, ராமர் பிள்ளை!!, மூலிகை பெட்ரோல்!!! - 3


இந்த தொடரில் இடம்பெறும் நிகழ்வுகள் அனைத்தும் 2000-01 ஆண்டுகளில் என்னுடைய நேரிடை அனுபவம். இதன் மூலம் எந்த தனி மனிதரைப் பற்றியோ அல்லது  குறிப்பிட்ட இயக்கத்தைப் பற்றியோ ஒரு சார்பான முடிவுக்கு வந்துவிடவேண்டாம். இது என்னுடைய தனிப் பட்ட அனுபவங்களும் அதனால் ஏற்பட்ட கருத்துக்கள் மாத்திரமே....

மணி அடித்தவுடன் பரபரப்பாய் எழுந்தவர் 'கொஞ்சம் பொறுங்கள் வந்துவிடுகிறேன்' என வெளியே கிளம்பினார்.பேச்சுவார்த்தையில் சுவாரஸ்யமிழந்திருந்த நான் இன்னொரு நாள் வருகிறோமே என கிளம்ப, கொஞ்சம் பொறுக்குமாறு பணிவுடன் வேண்டினார்.அவர் கதவை திறந்தபோது வெளியே பரபரப்பாய் இருந்தது. கொஞ்சத்தில் வெளியே பயங்கர நிசப்தம், கட்டிடத்தில் நாங்கள் மட்டும்தான் இருக்கிறோமோ என்கிற மாதிரியான அமைதி. வெளியே வந்தால் கட்டிடத்தில் நாங்கள் மட்டும்தான்.....

ஆஹா எங்க ஒருத்தரையும் காணமே! என கீழே வந்தால் கட்டிடத்தின் முன்னால் இருந்த மைதானத்தில் "ஜீ" உட்பட எல்லோரும் காக்கி டவுசரும், வெள்ளை பனியனுமாக உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தனர் . எங்களோடு வந்த ராமர் மட்டும் பேண்ட்,சட்டையில் வித்தியாசமாய் அவர்கள் நடுவில். இடையிடையே ஏதேதோ கோஷமிட்டனர். அப்புறம் ஆளுயரத்திற்கு கம்புகளை கையில் பிடித்துக்கொண்டு பாடல்கள் பாடினர். எல்லாம் பாரதமாதாவை வாழ்த்தித்தான்...

சென்னையின் பரபரப்பான மையத்தில் இப்படியும் ஒரு கும்பல் இயங்குவது ஆச்சர்யமாய் இருந்தது. இதுதான் சமயமென அடுத்தசுற்று பேச்சு வார்த்தைக்காக காத்திருந்த தெலுங்கு ஆசாமிகளை பிடித்தேன், அவர்கள் கடப்பாவில் குவாரி வைத்திருப்பதாகக் கூறினர்.கொஞ்சத்தில் அவர்களுக்கும் சந்திரபாபு நாயுடுவுக்கும்...அம்மாவாசை,அப்துல் காதர் தொடர்பிருப்பது புரிந்தது. 'அரசியல்ல இதெல்லாம் சஹஜமப்பா' என நினைத்துக்கொண்டு, திட்டம் குறித்து அவர்களை கிண்டினேன். ராமரை அவதாரபுருஷராகவும்(!), RSSகாரர்களை குபேரசம்பத்தை அருளப்போகும் மஹாலட்சுமியாகவும் கருதிக்கொண்டிருப்பது புரிந்தது. 

நிதர்சனத்தில் இவர்களின் திட்டம் சாத்தியமில்லை என்பதையும் புரியவைத்தேன்.சீனாவில் காப்புரிமைக்கு பதிந்திருப்பதாக அவர்கள் காட்டும் ஆவணம் நம்பத் தகுந்தது அல்ல என்றும், ஏன் இந்தியாவில் காப்புரிமைக்கு பதியவில்லை என்கிற ஐயத்தையும் பகிர்ந்து கொண்டேன்.
மேலும் எதெற்கெடுத்தாலும் "ஜீ" பெட்ரோலிய மந்திரியுன் பேசுவதாகக் கூறுவது அறியாமையின் உச்சம், மூலிகை எரிபொருள் என்பது 'மரபு சாரா எரிசக்தி துறை' என்கிற துறையின் கட்டுப்பாட்டில் வரக்கூடியது.இந்த அடிப்படை கூட தெரியாமல் பேசிக் கொண்டிருப்பவர்களிடம் என்ன வர்த்தகம் செய்யமுடியும் என அவர்களை கலைத்தேன்.

அவர்கள் பணத்தைக் கொடுத்து ஏமாந்துவிடக் கூடாது என்கிற நியாயமான கவலை, அக்கறையில்தான் அதைச் சொன்னேன்.இப்போது என்ன செய்வது என அவர்கள் மிரள , இப்போது திடிரென வேண்டாம் என மறுத்தால் ஏதாவது பிரச்சினை வருமா என பயந்தார்கள்.பேசிப்பார்ப்போம் கவலைப்படாதீர்கள் என சமாதானம் சொல்லிக் கொண்டிருந்த வேளையில் "ஜீ" திரும்ப வந்தார். தாமதத்திற்கு மண்ணிப்புக் கோரினார். ரொம்பவும் தன்மையான மனிதராக தன்னைக் காட்டிக்கொள்ளும் முனைப்பு அவரிடத்தில் இருந்தது.

இப்போது "ஜீ" முற்றிலும் வேறு மனிதராக பேசினார்.என்னுடைய சந்தேகங்களையும் கவலையையும் பகிர்ந்து கொள்வதாக கூறினார். சந்தைப் படுத்துவது தொடர்பாக எங்களை மாற்றுத் திட்டம் தர இயலுமா எனக் கேட்டதுதான் ஆச்சர்யத்தின் உச்சம். இதுதான் சமயமென தெலுங்குகாரர்களை காப்பாற்ற முனைந்தேன். "ஜீ" சரியென ஒப்புக்கொண்டார். அவர்களையும் அழைத்து விரைவில் புதுப்பிக்கப்பட்ட திட்டத்துடன் அவர்களை தொடர்பு கொள்வதாக கூறினார். சரி விரைவில் சந்திக்கிறோம் என கிளம்பியபோது "ஜீ" என்னுடன் தனித்து பேச விரும்புவதாக கூறினார்.

அந்த தெலுங்கு பிரமுகர் கிளம்பும் போது கையை பிடித்துக் கொண்டு சிரித்தவேளையில் அவர் கண்களில் தெரிந்த நன்றியும், கைகளில் கொடுத்த அழுத்தமும் இன்னமும் பசுமையாய் இருக்கிறது.அதற்குப் பிறகு அவர்களை நான் சந்திக்கவில்லை.ராமரும் அவர்களிடமிருந்து எந்த தகவலுமில்லை என்று கூறினார்.

அவர்கள் போனபிறகு "ஜீ" கேட்ட முதல் கேள்வி, எங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சிங்கத்தின் குகைக்குள் போய் உட்கார்ந்து கொண்டு..."நீங்கள்தானே மஹாத்மாவை கொன்றீர்கள்","இன்றைக்கு மத்தியில் ஆளுபவர்கள் உங்கள் வீட்டு நாய்க்குட்டிகள்தானே!"..."நீங்கள் ஒரு மாஃபியா கும்பல்"...இப்படில்லாம் சொல்ல நான் என்ன கட்டபொம்மனா!.......ஹி..ஹி எந்த பிரதிபலனும் பாராமல் கிருஸ்த்துவ பாதிரியார்கள் போல தன்னலமற்ற சேவை செய்கிறீர்கள் என ஐஸ் வைத்தேன்.

அவருக்கு கோபம் வந்துவிட்டது...எங்களை அவர்களோடு ஒப்பிடாதீர்கள் அவர்கள் மதத்தை பரப்புகிறார்கள்.வெளிநாட்டுப் பணத்தைக் கொண்டு மீண்டும் நம்மை அடிமையாக்குகிறார்கள் என கோபமாகி, நிதானித்து பெருமூச்சு விட்டு எங்களுடைய சேவை தன்னலமற்றது என சொல்வதற்கு கூட உவமைக்கு அவர்கள் தேவைப்படுகிறார்கள் என அங்கலாய்த்தார், எனினும் உங்கள் கூற்று நேர்மையானது, உங்களை பிடித்திருக்கிறது என திரும்ப ஐஸ் வைத்தார். ஆஹா தப்பிச்சோம்டா! என நினைத்துக் கொண்டேன்.

எங்களைப் பற்றி நீங்கள் மேலும் தெரிந்துகொள்ள வேண்டுமென ஆசைப்படுகிறேன், நான் எதையும் உங்களிடம் திணிப்பதாக நினைக்காவிட்டால் எங்கள் புத்தகசாலையை பாருங்கள் அங்கேயுள்ள புத்தகங்கள் உங்களுக்கு சில தெளிவுகளைதரும். உங்களை மாதிரியான இளைஞர்கள் சமூகத்தைப் பற்றியும் யோசிக்கவேண்டும் என உபதேசித்தார். ஆஹா எதுக்கோ ப்ராக்கெட் போடறாங்களே! என மண்டைக்குள் விளக்கெறிய ஆரம்பித்தது.எதையும் காட்டிக்கொள்ளாது அவசியம் பார்க்கிறேன் என சொல்லியவுடன் உதவியாளர் ஒருவரை என்னை அவர்களின் புத்தகசாலைக்கு அழைத்துச் செல்லக் கூறி. என்னை மீண்டும் சந்திக்க ஆவலாய் இருப்பதாய் "ஜீ" விடைபெற்றார்.

தொடரும்....

(2006ல் எழுதிய தொடர், சேகரிப்புக்காக மீள் பதிவு )

நான்!, ராமர் பிள்ளை!!, மூலிகை பெட்ரோல்!!! - 2இந்த தொடரில் இடம்பெறும் நிகழ்வுகள் அனைத்தும் 2000-01 ஆண்டுகளில் என்னுடைய நேரிடை அனுபவம். இதன் மூலம் எந்த தனி மனிதரைப் பற்றியோ அல்லது  குறிப்பிட்ட இயக்கத்தைப் பற்றியோ ஒரு சார்பான முடிவுக்கு வந்துவிடவேண்டாம். இது என்னுடைய தனிப் பட்ட அனுபவங்களும் அதனால் ஏற்பட்ட கருத்துக்கள் மாத்திரமே....


மூலிகை எரிபொருள் சாத்தியம்தான் எனத் தெரிந்த பின் வர்த்தகரீதியான பேச்சுவார்த்தையை துவக்கினேன்.அவர் அதெல்லாம் நீங்கள் "ஜீ" கிட்டதான் பேசனும் என்றார். யாருங்க இந்த "ஜீ" ன்னு கேட்க, அவர் RSS இயக்கத்தின் தமிழக அமைப்பாளர் என்றார்.இது நான் கொஞ்சமும் எதிர்பார்க்காதது,RSS மக்களுக்கு இதில் என்ன வேலை? அவர்கள் எப்போது வர்த்தக விவகாரங்களில் இறங்கினர்? என அலை அலையாய் கேள்வி. தவிர்த்து விடலாம் என நினனப்பதற்குள் காலம் கடந்திருந்தது. "ஜீ" எங்களை சந்திக்க அனுமதியும், நேரமும் தந்திருந்தார்.அவர்களின் அலுவலகத்திற்கு நாங்கள் அழைக்கப்பட்டோம்.

ராமர் ஒரு ஏமாற்றுக்காரர் என அறிவியலாலர்களும், ஊடகங்களும் கைவிட்ட நிலையில், அரசியல்வாதிகள் தொழில்நுட்பத்தை தங்களிடம் தந்துவிடுமாறு அன்பாகவும், அடித்தும், பொய்வழக்குப் போட்டும் துன்புறுத்திய அந்த கொடுமையான நாட்களில், கையில் காசில்லாமல் உதவ ஆளில்லாமல் தெருவில் நின்ற ராமர் ஏதோ ஒரு வழியில் RSS ன் தலைவர் திரு.சுதர்சன் அவர்களிடம் தன் பரிதாப நிலையை தெரிவிக்க, அவரின் கருனைப் பார்வையினால் RSS அவரை தத்தெடுத்ததாகவும், தற்சமயம் தான் ஒரு முழுநேர RSS ஊழியராக மாறிவிட்டதாகவும்...வழக்குகளை எல்லாம் அவர்களே ஏற்று நடத்துவதாகவும் எனவே அவர்கள் எடுக்கும் முடிவே தன்னுடையது என தன்னுடைய நன்றியுணர்வைக் காட்டினார்.

RSS அலுவலக வாயிலில் தமிழக காவல்துறை ராணுவமுகாம் மாதிரியான அமைப்புகளுடன் சோதனைகளும் நடத்தினர்.நம்மளையே இந்த தடவு தடவறாங்களே, பொம்பள புள்ளைங்க வந்தா என்ன பண்ணுவாய்ங்களோன்னு நினைத்து பெருமூச்சு விட்டுக்கொண்டே உள்ளே போனேன்.மரங்களின் அடர்த்தியில் அந்த கட்டிடம் அமானுஷ்ய அமைதியுடன் தென்பட்டது. முதலில் ஒரு அரையிருட்டான அறையில் உட்கார வைக்கப் பட்டோம்.கொஞ்சம் கூட சினேகமில்லாத முதத்துடன் சந்தேகமான பார்வையுடன் சில ஒல்லியான ஆசாமிகளும் பல கொழுத்தவர்களையும் அங்கே காண முடிந்தது.அனைவரும் வேஷ்டி சட்டையில் காணப்பட்டனர்.

சற்று நேரத்தில் இரண்டு தெலுங்குகாரர்கள் எங்களோடு உட்கார வைக்கப்பட்டனர்.அவர்களும் எங்களைப் போல பேச்சுவார்த்தைக்கு(!) வந்தவர்கள்....முதலில் தெலுங்கு ஆசாமிகள் அழைக்கப் பட்டனர். 15-20 நிமிடம் கழித்து நாங்கள் அழைக்கப் பட்டோம்.அதிக வெளிச்சமற்ற அறையில் வட்டவடிவ மேசையில் நாற்பதுகளின் ஆரம்பத்தில் இருந்த எளிமையான அமைதியான மனிதர்தான் "ஜீ".

பொதுவாக இது மாதிரியான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் முதல் 10 நிமிடங்கள் இரண்டு தரப்புக்குமே ரொம்ப முக்கியமானது. பரஸ்பரம் ஒருவர் மற்றவரை எடை போடவும் எத்தகைய Statergy யினை முன்னெடுத்து தங்கள் இலக்கினை அடைவது என்பதை தீர்மானிக்கும் தருணமாய் அமையக்கூடியது. ஆனால் பேச்சு வார்த்தை துவங்கிய சில நிமிடங்களில் ரொம்பவே குழந்தைத்தனமான ஒரு வர்த்தக பேச்சுவார்த்தைக்கு வந்திருப்பது எரிச்சலைக் கூட்டியது.

எங்களுக்கு முன் வந்த தெலுங்குக்காரர்கள் திரு.சந்திரபாபு நாயுடு அவர்களின் பிரதிநிதி எனக் கூறினார். ஆந்திரா முழுவதுக்குமான தயாரிப்பு மற்றும் விற்பனை உரிமையை கேட்டு வந்திருப்பதாய் கூறினார்.அறுபது கோடி வரை தரத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.அது எந்த அளவிற்கு உண்மையோ தெரியாது. எங்களுக்கு தமிழக உரிமையை தருவதாகவும் அதற்கான விலையை கூறுமாறு கேட்டார். எனக்கு சிரிப்புதான் வந்தது....

விலையைக் கூறுவதற்கு முன் எரிபொருளின் நம்பகத் தன்மையை நிரூபிக்க எத்தகைய ஆவணங்களை வைத்திருக்கிறீர்கள் எனக் கேட்டதற்கு, சம்பந்தமே இல்லாமல் ஏதேதோ பேசினார். தாங்கள்தான் மத்திய அரசினை செலுத்துவதாகவும், தாங்கள் நினனத்தால் உட்கார்ந்த இடத்திலிருந்தே எந்த உத்தரவுகளையும் பெற்றுத்தர முடியும் எனக் கூறினார்.பேச்சுவார்த்தை தொடர, அவரின் வியூகம் உடைவதை தடுக்க திராணியற்று உட்கார்ந்திருந்தார் என்றே சொல்லலாம்.எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பின நான் முழுமையாக பயன்படுத்திக் கொண்டேன் இப்போதிருக்கும் நிலையில் நீங்கள் ஓசியாய் கொடுத்தால் கூட வாங்க எவனும் வரமாட்டான் என அழுத்தமாய் கருத்தினை பதிந்தேன்.

அப்போது வெளியே ஒரு மணி அடித்தது.....

தொடரும்

(2006ல் எழுதிய தொடர், சேகரிப்புக்காக மீள் பதிவு )

நான்!, ராமர் பிள்ளை!!, மூலிகை பெட்ரோல்!!! - 1


இந்த தொடரில் இடம்பெறும் நிகழ்வுகள் அனைத்தும் 2000-01 ஆண்டுகளில் என்னுடைய நேரிடை அனுபவம். இதன் மூலம் எந்த தனி மனிதரைப் பற்றியோ அல்லது  குறிப்பிட்ட இயக்கத்தைப் பற்றியோ ஒரு சார்பான முடிவுக்கு வந்துவிடவேண்டாம். இது என்னுடைய தனிப் பட்ட அனுபவங்களும் அதனால் ஏற்பட்ட கருத்துக்கள் மாத்திரமே....

பொது நண்பர் ஒருவர் மூலிகைபெட்ரோல் திரு.ராமர்பிள்ளை நல்ல முதலீட்டாளர்களை தேடிக் கொண்டிருப்பதாகவும்,அவரை என்னிடம் அழைத்து வருவதாகவும்... பேசிப்பாருங்களேன் என தூபம் போட்டார். அப்போது நான் பெரிய அளவில் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்த நேரம். அகில இந்திய அளவில் ஒரு ரவுண்டு படம் காட்டி ப்ளாப் ஆகியிருந்த ராமரை ஒரு மாலையில் என் அலுவலகத்தில் வைத்து சந்தித்தேன்.தையல் பிரிந்த சட்டை...தேய்ந்த செருப்பு, துவைத்து நாளாயிருந்த பேண்ட், கலைந்த தலை, களைத்த முகம்... என வெள்ளந்தியான கிராமத்து மனிதனை சந்தித்த உணர்வும் அனுதாபமுமே எனக்குள் மேலோங்கியிருந்தது.

அப்போது அவரைப் பற்றிய நிறைய செய்திகளும்/வதந்திகளும் ஊடகங்களில் அலசி காயப்போட பட்டிருந்தாலும் மனிதர் தன் கண்டுபிடிப்பு பற்றி உறுதியாகவே பேசினார். சமயத்தில் அவர் கண்களில் தெரிந்த நம்பிக்கை ஆச்சர்யமாகவும் இருந்தது.தேர்ந்த விற்பனை பிரதிநிதியைப் போல பேசத்தெரியாததே அவரின் பெரிய குறையாக இருக்குமென நினைத்துக் கொண்டேன்.

முதல் சந்திப்பில் பெரிதாக ஏதும் பேசவில்லை.அப்போது சூளையில் ஒரு வாடகை வீட்டிலிருப்பதாக கூறினார்.ஆரம்பத்தில் இறுக்கமாயிருந்தவர் கொஞ்சம் கொஞ்சமாய் அவிழ ஆரம்பித்தார்.தமிழக அரசியல்வாதிகளால் துன்புறுத்தப்பட்டதை கண்ணில் நீரோடு கூறினார்.நம்புகிற மாதிரித்தான் இருந்தது. கதை கேட்கிற ஆவலில் நிறைய கிளறினோம்...நிறையவே கிடைத்தது. இரண்டு மூன்று சந்திப்புக்குப்பின்னரே அவர் எங்களை நம்ப ஆரம்பித்தார்.தன்னுடைய கண்டுபிடிப்பினைப் பற்றி சில தகவல்களை கூறினார், எங்களுக்கு அவர் மீது நம்பிக்கை வருவதற்காகவே கூறுகிறார் என்றே நினைத்தேன்.என் சந்தேகத்தை நிவர்த்திக்கும் வகையில் என் முன்னே தயாரித்துக் காட்டுவதாகக் கூறினார்.

ஒரு நாள் அவர் கூறிய இடத்தில் அதை செய்தும் காட்டினார். என் முன்னால் எந்த கண்ணாடிக்குச்சியையும் வைத்துக் கிண்டவில்லை. ஒரு கொப்பரை தண்ணீரில் என்ன இலை என கண்டறியமுடியாத வகையில் வெற்றிலை மாதிரியான இலைகள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு ஊற வைக்கப்பட்டிருந்தது.வெற்றிலையா எனக் கேட்டதற்கு பதில் சொல்லாமல் சிரித்தார். ஒரு மூட்டையில் வெண்ணிற உப்பொன்று இருந்தது. என்ன உப்பென கேட்டதற்கு Citric குடும்பத்தைச் சேர்ந்த உப்பென்றார். படிக்கிற காலத்தில் வேதியியலையும் அதன் சமன்பாடுகளையும் பார்த்து பேதியானவன் நான்...ஹி..ஹி...

இலையை வடித்து தண்ணீரை ஒரு கண்ணாடி ட்ரம்மில் கொட்டினார், இலை மூன்று நாட்களாக ஊற வைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார், மெய்ப்பிக்கும் வகையில் தண்ணீர் சற்றே நுரைத்திருந்தது.தண்ணீரை முகர்ந்து பார்த்தோம் பச்சிலை மணம், தீக்குச்சியைக் கொளுத்தி தண்ணீரில் போட்டேன்...அனைந்தது.உடனே உப்பிலும் தீ வைக்கச் சொன்னார் செய்தேன்...கற்பூரம் போல் எரியுமென நினைத்த்து ஏமாந்தேன்.கேலியாய் சிரித்தார்.தண்ணீரில் குறிப்பிட்ட அளவில் உப்பைக் கரைத்தார்.நானும் கரைத்தேன்...கையை விட்டே கரைத்தோம்.கொஞ்ச நேரம் கழித்து தண்ணீர் இரண்டு அடுக்காய் பிரிந்திருந்தது.

காகிதம் இருக்கிறதா என என்னிடம் கேட்டு வாங்கி தண்ணீரின் மேல்மட்டத்தில் தோய்த்து அதை கொளுத்தச் சொன்னார்....காகிதம் குப்பென பற்றி எரிந்தது.மேலே திரண்டிருந்த திரவம் நிறமற்று சற்றே அடர்வாய்,பிசுபிசுப்பாய், மெலிதான பச்சை வாசனையுடன் இருந்தது.அதை ஒரு கோப்பையில் அள்ளி அதில் தீவைக்க கொளுந்து விட்டு எரிந்தது....நம்ப முடியாத காட்சி.அந்த திரவத்தை பெட்ரோலுக்கு முந்தைய நிலை என்று சொன்னார்.இதை சரியான தொழில் நுட்பத்தில் உருவாக்க பெட்ரோலை விட அதிக எரிதிறன் கொண்ட எரிபொருள் கிடைக்குமெனச் சொன்னார்.

தொடரும்.


(2006ல் எழுதிய தொடர், சேகரிப்புக்காக மீள் பதிவு )

Wednesday, October 10, 2012

டாக்டர் ஆப்பிரஹாம் கோவூர்இந்த தலைமுறைக்கு அவ்வளவு பரிச்சயமில்லாத ஒரு பகுத்தறிவாளர் பற்றிய ஓர் பதிவு....

ஒல்லியான உருவம், சிறிதாய் தாடி, மீசை,தொப்பி, கழுத்துப்பட்டி,ஊடுருவும் விழிகள்,கூரிய நாசி,வளமான குரல்,அளவான பேச்சு,ஆழமான அறிவு,ஆண்மையுள்ள ஆதிக்க வாதங்கள்,சவால்கள்,விளம்பரம் செய்து மேற்கொள்ளும் பயணங்கள் இவைதான் டாக்டர் கோவூரின் அடையாளங்கள்.கேரளத்தைப் பிறப்பிடமாக கொண்டாலும் இலங்கையில் பல ஆண்டுகாலம் வாழ்ந்து மறைந்த தலைசிறந்த மனோதத்துவ மருத்துவர்.

ஒரு பகுத்தறிவாளர் என்கிற முறையில் டாக்டர் கோவூரின் பணிகளை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.தென்னிந்தியாவிலும்,இலங்கையிலும் காணப்பெறும் மூட நம்பிக்கைகளை முறியடிப்பது. மற்றது மனோதத்துவ வழியில் சோதிடம்,ஆவியுலக மோசடிகள்,மனோவிகார ஏமாற்றுக்கள் மற்றும் மத நம்பிக்கைகள் அவற்றால் விளையும் மனமாற்றங்களை அலசி ஆராய்ந்து உண்மைகளை அறிவார்த்தமாக உணர்த்துதல்.

தன் வாழ்நாளில் அனேக சாமியார்களையும், மதகுருக்களையும் அஞ்சாமல் வம்புக்கிழுத்தவர் இவராய்தானிருக்க முடியும்.ஆச்சர்யகரமாக எந்த ஒரு சாமியாரும் இவருடைய சவால்களை எதிர்கொள்ளத் துணியவில்லை. சாமியார்களின் அற்புதங்களையும்,லீலா வினோதங்களையும் அறிவியல் பூர்வமாய் பொதுமக்கள் முன்பு செய்து காட்டி சாமியார்களின் புரட்டுகளை அம்மபலப்படுத்தினார்.

குறிப்பிட்ட மதம் என்றில்லாமல் அனைத்து மதங்களின் மூட நம்பிக்கையைச் சாடினார்,இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் வந்த அச்சுறுத்தல்களுக்கு வளைந்து கொடுக்காமல் தன் கொள்கையில் தீவிரம் காத்த பகுத்தறிவாளர்.பழமையான மரபுவழி மூடநம்பிக்களையும்,சடங்குகளையும் சம்பிரதாயங்களுக்கெதிராக அறிவு வழியாக போராடுவதையே தன் வாழ்நாள் அலுவலாகக் கொண்ட போதிலும் அரசியல்,சமூக இயலுக்கு எதிராக பிற்போக்காகவோ,அறிவீனமாக எதையும் கூறியதில்லை.

உலகளாவிய அளவில் நாத்திகத்தையும்,பகுத்தறிவுப் பிரச்சாரத்தையும் பரப்புவதையே தன் வாழ்நாள் குறிக்கோளாய்க் கொண்டு வாழ்ந்த கோவூர்,தனது என்பதாவது வயதில் மறைந்தார்.மறைவிற்குப் பின் இவரது உடல் கொழும்பு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக வழங்கப்பட்டது.விழிகள் சென்னை மருத்துவமனையில் பார்வையற்ற இருவருக்குப் பொருத்தப்பட்டது.

(2005 ல் எழுதிய பதிவு, சேகரிப்புக்காக மீள் பதிவு செய்கிறேன்.)

Monday, October 1, 2012

மகாத்மாவும், கொலைமுயற்சிகளும்....மகாத்மா தனது வாழ்நாளில் குறைந்தது பத்து முறையாவது கொலை முயற்சியில் இருந்து உயிர் தப்பியிருக்கிறார் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். இந்த பத்து முயற்சிகளில் ஆறு மட்டுமே  முறையாக ஆவணப்படுத்தப் பட்டுள்ளது.

1934 ஆம் ஆண்டு பூனா நகராட்சி சார்பில் அளிக்கப்பட்ட வரவேற்பில், காந்தியடிகள் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. அதிர்ஷ்டவசமாய் வெடிகுண்டு காரின் முன்னால் விழுந்ததால் உயிர் தப்பினார். இதில் நகராட்சி அதிகாரி ஒருவரும், இரண்டு போலீஸ் அதிகாரிகளும் மேலும் நாலு பேரும் படுகாயமடைந்தனர்.

1944 ஆம் ஆண்டு பஞ்சக்னி என்ற இடத்தில் காந்தியடிகளை நோக்கி கையில் கத்தியுடன் கொலைவெறியுடன் ஒரு இளைஞன் ஓடிவந்தான், வந்தது வேறு யாருமல்ல.நாதுராம் விநாயக் கோட்சேதான், இதை பூனாவிலுல்ல 'காரத்தி லாட்ஜ்' என்ற விடுதியின் உரிமையாளர் மணி சங்கர் புரோகித் என்பவர் பின்னர் உறுதி செய்திருக்கிறார். சதாரா மாவட்டத்தில் உள்ள மாவட்ட மத்திய வங்கியின் அப்போதைய தலைவரான பி.டி.பிசாரே என்பவர் வழிமறித்து கத்தியை பிடுங்கியதால் காந்தி உயிர் தப்பினார்.

1944 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜின்னாவை சந்திக்க வார்தாவிலிருது பம்பாய்க்கு புறப்படுவதாக இருந்த சமயத்தில் மகாத்மாவின் செயலாலர் திரு.பியாரிலாலுக்கு மாவட்ட போலீஸ் அதிகாரியிடமிருந்து வந்த தொலை பேசி அழைப்பில், காந்தியை கொல்ல பூனாவிலிருந்து ஒரு தீவிரவாதக் குழு வார்தா வந்திருப்பதாகவும் காந்தி உயிருக்கு ஆபத்து என்றும் எச்சரித்தார். இதையறிந்த மகாத்மா அவர்களை சந்திக்க விரும்பினார்...மேலும் அவர்களை சந்தித்துவிட்டுதான் பம்பாய் கிளம்புவேன் என்றும் கூறினார். ஆனால் அதற்கிடையே போலீஸார் அந்த கும்பலை வளைத்துப் பிடித்தனர். அந்த குழுவில் இருந்த தாட்டே என்பவரிடம் நீளமான கத்தி இருந்தது. விசாரனையில் அது காந்தி செல்லும் காரின் டயரை சேதப்படுத்த வைத்திருந்தாக பொய் கூறியதாக பதிவாகியிருக்கிறது.

1946 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிறப்பு ரயிலொன்றின் மூலமாய் காந்தியடிகள் பூனா சென்று கொண்டிருந்தார். இரயில் நள்ளிரவில் 'நேரல்' மற்றும் 'கர்ஜத்' இரயில் நிலையங்களுக்கிடையே சென்று கொண்டிருந்த போது இரயிலை கவிழ்ப்பதற்காக தண்டவாளத்தின் மீது பெரிய பெரிய பாறாங்கற்கள் வைக்கப்பட்டிருந்தது. அதிர்ஷ்ட வசமாக இஞ்சின் டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஆனால் ரயிலின் இஞ்சின் படுசேதம் அடைந்தது.

1948 ஆம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி டெல்லியில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் இந்து மத தீவிரவாதியான 'மதன்லால் பாவா' என்பவர் காந்தியடிகள் மீது வெடிகுண்டு வீசியதும் மயிரிழையில் குறிதவறிப் போய் வெடித்ததும் அனைவரும் அறிந்ததே. இந்தச் சூழ்நிலையிலும் பதட்டமின்றி பிரார்த்தனை கூட்டத்தை மகாத்மா நடத்தி முடித்தார்.

இதற்கு பத்து நாட்கள் கழித்து 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் கோட்சே கும்பலின் சதிக்கு மகாத்மா பலியானார்.

இறப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன் காந்தியடிகள் கூறிய கருத்துடன் பதிவினை நிறைவு செய்ய விரும்புகிறேன்.

"சில நாட்களுக்கு முன்பு நடந்த கொலைமுயற்சி போன்று பிரிதொரு முயற்சியில் என்னை யாரோனும் துப்பாக்கியின் தோட்டாவினால் சுட்டுக் கொன்றுவிடுவானாகில் அதை எவ்வித விறுப்பு வெறுப்பின்றி சந்திக்கவே விறும்புகிறேன். உதட்டில் கடவுளின் நாமத்தை கூறிக்கொண்டே எனது இறுதி மூச்சை விட விரும்புகிறேன். அப்போதுதான் நான் எம்மாதிரியான ஒரு வாழ்க்கை வாழ வேண்டுமென்று விரும்பியிருந்தேனோ அப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தவன் என்ற தத்துவத்துக்கு உரியவனாவேன்."

(இது கடந்த 2006ல் எழுத ஆரம்பித்த காலத்தில் எழுதிய பதிவு. மகாத்மாவின் பிறந்தநாளையொட்டி மீள்பதிவு.)