Sunday, January 19, 2014

எது கவிதை?





Now, What is Poetry?
Now, what is poetry?
If you say it is simply a matter of words,
I will say a good poet gets rid of words.
If you say it is simply a matter of meaning,
I will say a good poet gets rid of meaning.
“But,” you ask, “without words and without meaning,
where is the poetry?”
To this I reply: “Get rid of words and get rid of meaning,
And there is still poetry.”
Yang Wan-li

Wednesday, January 15, 2014

விக்கிரமாதித்யன் கவிதை



எது குறித்தும்
எனக்கொன்றும் வெட்கமில்லை
வெட்கப்பட
நானொன்றும் குழந்தையில்லை
வெட்கப்பட வேண்டியதும்
நானில்லை

நான்
பெய்யும் மழை
வீசும் காற்று
எரியும் தீ
வழங்கும் பூமி
கவியும் வானம்

இங்கே
இடங்கெட்டுக் கிடக்கலாம்
சூழல் நாறித் தொலைக்கலாம்
இயல்பு அழிந்திருக்கலாம்
தன்மை மாறியிருக்கலாம்
முறைமை திரிந்திருக்கலாம்

முட்டாள்களுக்கும்
முரடர்களுக்கும் மத்தியில்
மூளையையும்
மனத்தையும்
முழுசாகக் காப்பாற்ற முடியாமல் போகலாம்

சுட்டு விரல் நீட்டி
கொட்டி முழக்கி
எத்தைக் காட்டி
வித்தகம் பேசுகிறீர்கள்
செத்தபிறகு
சிவனென்றும்
சுயம்புலிங்கமென்றும்
சொல்லிக்கொண்டிராதீர்கள்

எரிகிறபோதே
தெரியாத முண்டத்துக்கு
இருட்டில் என்ன தெரியும்

நரம்பில்லாத நாக்கு
நாலும் பேசும்தான்
நல்லது
நக்கவும் துழாவவும் மட்டுமே
நாக்கை வைத்துக்கொண்டால் போதும்...

- விக்ரமாதித்யன்

Sunday, January 5, 2014

நின்னை சரணடைந்தேன்.....


துன்பம் இனி இல்லை, சோர்வில்லை

சோர்வில்லை, தோற்பில்லை

நல்லது தீயது நாம் அறியோம்

நாம் அறியோம் நாம் அறியோம்

அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட

நல்லது நாட்டுக! தீமையை ஒட்டுக… 

நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்

Friday, January 3, 2014

வீரபாண்டிய கட்டபொம்மன் : அறியப்படாத பலவீனங்கள்

இன்று வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த நாள் (03.01.1760). ஒரு சுதந்திரப் போராளியாய் நாமறிந்த கட்டபொம்மனின் உண்மையான பக்கங்கள் கொஞ்சம் ஆச்சர்யமானது. தனிப் பட்ட சேகரிப்புக்காகவும், குறிப்புக்காவும் இந்த இணைப்பு.



Wednesday, January 1, 2014

இப்படியாகத் துவங்கியது 2014.....

புது வருடத்தில் இருந்து
அன்புக்காக ஏங்கும் கெட்ட பழக்கத்தை
விட்டு விட்டேன்

உங்களுக்கு எப்படி சொல்வது
நீங்களும் அன்பு செலுத்தும்
கெட்ட பழக்கத்தை விட்டுவிட வேண்டுமென்று

- மனுஷ்ய புத்திரன்

.................

வெறுப்பைப்போல திடமாக
வஞ்சகம்போல சந்தேகிக்க முடியாததாக
தீமையைப்போல தொடர்ந்து வருவதாக
கசப்பைப்போல நெஞ்சோடு அடைப்பதாக
குற்றத்தின் கறைகளைப்போல கழுவித் தீராததாக
ஒரு பொய்யைப்போல வாக்குறுதி அளிப்பதாக

இல்லை
உனதிந்தப்
பிரியங்கள்

- மனுஷ்ய புத்திரன்

:)