Wednesday, January 1, 2014

இப்படியாகத் துவங்கியது 2014.....

புது வருடத்தில் இருந்து
அன்புக்காக ஏங்கும் கெட்ட பழக்கத்தை
விட்டு விட்டேன்

உங்களுக்கு எப்படி சொல்வது
நீங்களும் அன்பு செலுத்தும்
கெட்ட பழக்கத்தை விட்டுவிட வேண்டுமென்று

- மனுஷ்ய புத்திரன்

.................

வெறுப்பைப்போல திடமாக
வஞ்சகம்போல சந்தேகிக்க முடியாததாக
தீமையைப்போல தொடர்ந்து வருவதாக
கசப்பைப்போல நெஞ்சோடு அடைப்பதாக
குற்றத்தின் கறைகளைப்போல கழுவித் தீராததாக
ஒரு பொய்யைப்போல வாக்குறுதி அளிப்பதாக

இல்லை
உனதிந்தப்
பிரியங்கள்

- மனுஷ்ய புத்திரன்

:)