Friday, April 24, 2015

நினைவைத் துழாவினேன்....


முன்மாதிரிகளின்
பிரமாண்டங்களில்
ஒன்றுமில்லாததாகிறது
கிளர்ந்தும் திரண்டும் எழும்
அடர்த்தியற்ற வடிவமற்ற
உள்ளெழுச்சிகள்
இருப்பினும்…
தினம் பூக்கும்
பூக்கள்
எதை நிரூபிக்கிறது
பூத்திருத்தலைத் தவிர்த்து?

-அய்யனார் விஸ்வநாத்.